இனிதான் பாபர் அசாம் ஆட்டமே இருக்கு.. கேப்டன்சி தலைவலியே இல்லை.. கணிப்பை வெளியிட்ட கவுதம் கம்பீர்!
மும்பை: வரும் காலங்களில் தான் பாபர் அசாமின் முழு திறமையும் வெளிப்படும் என்று இந்திய முன்னாள் வீரர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதற்கு கேப்டன் பாபர் அசாமின் மோசமான கேப்டன்சியும், அணியை ஒருங்கிணைத்து வழிநடத்த முடியாததுமே காரணமாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத், டி20 அணி கேப்டனாக ஷாகின் அப்ரிடி தேர்வு செய்யப்பட்டனர். இருப்பினும் பாபர் அசாம் நட்சத்திர பேட்ஸ்மேன் என்பதால், அவர் நிச்சயம் இழந்த ஃபார்மை மீட்டெடுப்பார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் மீண்டும் பழைய உற்சாகத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் பாபர் அசாம் பற்றி இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பேசுகையில், இனி தான் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மற்றும் முற்றிலும் மாறுபட்ட பாபர் அசாமை நாம் அனைவரும் பார்க்கப் போகிறோம். உலகக்கோப்பை தொடருக்கு முன், பாபர் அசாம் தான் சிறந்த வீரராக இருபபர் என்று கணித்திருந்தேன். ஆனால் அணி மோசமாக செயல்படும் போது, கேப்டன் மீதான அழுத்தம் அதிகமாக இருக்கும்.
தற்போது பாபர் அசாம் கேப்டன்சியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதனால் தான் சொல்கிறேன், பாபர் அசாமின் முழு திறமையும் நிச்சயம் வெளிவரும். அவரிடம் இன்னும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் மிச்சமிருக்கிறது. அதிலும் கேப்டன்சி அழுத்தமும் இல்லை. அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரராக பாபர் அசாம் உருவாகுவார் என்று தெரிவித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பாபர் அசாம், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் 4வது இடத்திலும் இருக்கிறார். கேப்டன்சியில் இருந்து பாபர் அசாம் விலகிய பின் விளையாடும் முதல் தொடர் என்பதால், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Story first published: Sunday, December 10, 2023, 18:46 [IST]
Other articles published on Dec 10, 2023


Click it and Unblock the Notifications