Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏமாற்றுக் காரனை ஏன் ஹீரோ போல் நடத்துகிறீர்கள்? வெட்க கேடானது.. டேவிட் வார்னர் மீது ஜான்சன் தாக்கு

சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரியாவிடை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜான்சன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 14 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொடருடன் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Pak vs aus - Mitchell Johnson Lashes out david warner for getting farewell game

டேவிட் வார்னருக்கு பிரியாவிடை அளிக்கும் விதமாக இந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜான்சன் சாண்ட் பேப்பர் சர்ச்சையில் டேவிட் வார்னர் சிக்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை அதை நான் தான் செய்தேன் என்று அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அது குறித்து பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் தற்போது அவருக்கு பிரியா விடை அளிக்கிறார்கள். இது நாட்டுக்கு செய்யப்படும் அவமரியாதையாக நான் நினைக்கிறேன். எதற்காக இப்போது டேவிட் வார்னருக்கு பிரியாவிடை அளிக்கிறீர்கள் என்று யாராவது எனக்கு கொஞ்சம் சொல்ல முடியுமா? டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது தடுமாறி வரும் ஒரு வீரர் எதனால் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

தான் இந்த தேதியில் தான் ஓய்வு பெறப் போகிறேன் என்று அவரே முடிவு செய்ய யார் அதிகாரம் கொடுத்தது? ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு கரும்புள்ளியாக கருதப்படும் சேண்ட் பேப்பர் சர்ச்சையில் சிக்கிய ஒருவருக்கு ஹீரோ போல் எதற்கு வழி அனுப்பி வைக்கிறீர்கள். வார்னர் என்ன ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டனாக இருந்தாரா?

அந்த பொறுப்புக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாத நபர்.இன்னும் சொல்ல வேண்டுமானால் கேப்டனாக வரவே கூடாது என்று வாழ்நாள் தடை பெற்ற ஒரு வீரர். டெஸ்டில் அவர் மதிக்கத்தக்க ஒரு ரெக்கார்டை தான் வைத்திருக்கிறார். இன்னும் சிலர் சிறந்த தொடக்க வீரர் என்று வார்னரை வர்ணிப்பார்கள். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக டேவிட் வார்னரின் கிரிக்கெட் மிகவும் மோசமான நிலையில் தான் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் அவருடைய டெஸ்ட் ரெக்கார்டை பார்த்தால் கீழ் வரிசையில் பேட்டிங் செய்யும் வீரர்கள் போல் இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த அந்த சாண்ட் பேப்பர் சர்ச்சையை நான் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். அதற்கு காரணம் மற்றும் காரணம் கிடையாது என்றாலும் அந்த சமயத்தில் அணியின் அவர்தான் சீனியராக இருந்தார். வார்னர் கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்தால் தான் ஆனால் அதைத்தவிர அவர் வேறு எங்கு ரன்கள் அடித்தார். கடந்த 17 டெஸ்ட் இன்னிங்சில் அவர் ஒருமுறைதான் அரைசதமே கடந்திருக்கிறார். அப்படி இருக்கும்போது அவருக்கு எப்படி நீங்கள் அணியில் இடம் கொடுத்தீர்கள் என்று மிட்செல் ஜான்சன் கடுமையாக பேசி வருகிறார்.

Story first published: Sunday, December 3, 2023, 16:43 [IST]
Other articles published on Dec 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+