Pak vs aus - தடை விதித்த ஐசிசி.. ஷூவில் எழுதிய மெசேஜ்.. டிவிஸ்ட் வைத்த உஸ்மான் கவாஜா
மெல்போர்ன் : இஸ்ரேல், பாலத்தீன் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி அனைத்து உயிர்களும் சமம் என்று தனது ஷூவில் எழுத ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவுக்கு ஐசிசி தடை விதித்திருந்தது.
முதல் டெஸ்டில் இந்த மெசேஜுடன் அவர் களமிறங்க இருந்தார். ஆனால் இதனை பயன்படுத்த கூடாது என்று ஐசிசி அறிவுறுத்தி இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இரண்டாவது டெஸ்டில் அமைதி புறா ஒன்றை தனது பேட்டில் ஸ்டிக்கராக கவாஜா ஒட்டி பயன்படுத்தி இருந்தார்.

இதற்கு அவர் ஐசிசி இடம் அனுமதி கேட்க அதற்கு ஐசிசி அனுமதி வழங்கவில்லை. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். ஐசிசி நயவஞ்சகத்துடன் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹோல்டிங் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முதல் டெஸ்டில் கருப்பு பேட்ச் அணிந்து விளையாடிய உஸ்மான் கவாஜா இரண்டாவது டெஸ்டில் ஷூ வில் வேறு ஒரு மெசேஜை எழுதி டிவிஸ்ட் வைத்திருந்தார்.
அதில் தன்னுடைய இரண்டு மகள்களின் பெயரையும் உஸ்மான் கவாஜா எழுதியிருந்தார். தனது சொந்த மகள் பெயரை எழுதி இருந்ததால் ஐசிசியால் எதுவும் செய்ய முடியவில்லை. அதாவது இந்த உலகம் நாளை எனது மகளுக்கும் முக்கியம் அவர்களுக்கு ஏற்ற உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து உஸ்மான் கவாஜா இவ்வாறு எழுதி இருப்பதாக தகவல் வெளியானது. ஐசிசியின் இந்த நடவடிக்கைக்கு உஸ்மான் கவாஜா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
ஐசிசி இந்த விவகாரத்தில் இரட்டை நிலை எடுத்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த நிலையில் உஸ்மான் கவாஜாவின் இந்த கருத்துக்கு ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய வீரர்களும் ஆதரவு தெரிவித்து இருந்தார்கள். உஸ்மான் கவாஜா செய்தது நல்ல விஷயம் என்றும் அவர்களுக்கு நாங்கள் துணை நிற்போம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் கூறி இருந்தார். இந்த நிலையில் தனது ஷூ வில் மகள்களின் பெயரை எழுதி ஐசிசிக்கு உஸ்மான் கவாஜா டிவிஸ்ட் கொடுத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications