Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாவத்திற்கு பரிகாரம் தேடிய உஸமா மீர்.. ஒரே ஓவரில் 2 விக்கெட்.. பெங்களூருவில் தமிழக மருமகன் டக்அவுட்

பெங்களூரு : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் ஷாகின் ஆப்ரிடி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

Pak vs aus world cup - Shaheen afridi picks 2 wickets in a single over

வார்னர் 10 ரன்களில் இருக்கும்போது தூக்கி அடித்தார். அப்போது உஸமா மீர் என்ற பாகிஸ்தான் வீரர் அழகான கேட்சை கோட்டை விட்டார். இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு டேவிட் வார்னர் ரன்குவிப்பில் ஈடுபட்டார். இதைப் போன்று மிச்சல் மார்ஸ் அபாரமாக விளையாடி ரன்கனை சேர்த்தார். இருவரும் அடுத்தடுத்து சதத்தை கடந்ததால் இன்று பாகிஸ்தானுக்கு கச்சேரி தான் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆட்டத்தின் 34 வது ஓவரில் மீண்டும் ஷாஹீன் அப்ரிடி பந்து வீச வந்தார். அந்த ஓவரிலும் சிக்ஸர்கள் பறந்தது. எனினும் மிச்சல் மார்ஸ், அடித்த பந்தை இம்முறை உசாமா மீர் அபாரமாக பிடித்தார்.இதன் மூலம் டேவிட் வார்னருக்கு கோட்டை விட்டு தவறு செய்ததற்கு தற்போது பரிகாரமாக மிச்சல் மார்ஷ் கேட்சை பிடித்தார்.

Pak vs aus world cup - Shaheen afridi picks 2 wickets in a single over

இதனால் மிச்சல் மார்ஷ் 121 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதில் 10 பவுண்டரிகளும் ஒன்பது சிக்ஸர்களும் அடங்கும். இன்னும் பதினாறு ஓவர்கள் தான் பாக்கி இருப்பதால் ,அதிரடி வீரர் கிளன் மேக்ஸ்வல் வரை ஆஸ்திரேலிய அணி பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு அனுப்பியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா ரன் குவிக்கும் வேகத்தை ஒரே லெவலில் வைத்திருக்கலாம் என நினைத்தது.

ஆனால் ஷாகின் அப்ரிடி அடுத்த பந்திலே அவருடைய விக்கெட்டையும் வீழ்த்தினார். மேக்ஸ்வெல் எதிர்கொண்ட முதல் பந்தையே தூக்கி அடிக்க முற்பட்டார். அது பாபர் அசாமிடம் கேட்ச் ஆனது. இதன் மூலம் ஷாகின் அப்ரிடி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இது ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பு வேகத்தை குறைத்தாலும் தற்போது ஆஸ்திரேலியாவை வலுவான நிலையிலே வைத்திருக்கிறது.

Story first published: Friday, October 20, 2023, 17:10 [IST]
Other articles published on Oct 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+