Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டக் அவுட் ஆன பாபர் அசாம்.. வங்கதேசத்துக்கு எதிராக 16 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த பாகிஸ்தான்!

ராவல்பிண்டி : பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி நகரில் இன்று தொடங்கியது. மழை காரணமாக ஆட்டத்தின் முதல் பாதி நடைபெறவே இல்லை.

இதன் அடுத்து மதிய உணவு இடைவெளிக்கு பிறகு டாஸ் போடப்பட்டது. ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் அதனை பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுத்து விடலாம் என்ற நோக்கில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

pak vs ban Babar azam cricket

வங்கதேசம் போட்ட பிளானுக்கு நல்ல பலன் கிடைத்தது. ஏனென்றால் வங்கதேசத்தில் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக தடுமாறினர். தொடக்க வீரராக களம் இறங்கிய அப்துல்லா ஷபிக் இரண்டு ரன்களிலும், கேப்டன் மசூத் ஆறு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

இதனை அடுத்து பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் களத்திற்கு வந்தார். பாபர் அசாம், பாகிஸ்தான் அணியை காப்பாற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். டி20 உலக உலக கோப்பைக்கு பிறகு பாபர் அசாம், தற்போது தான் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுகிறார். இதனால் அவருடைய பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

ஆனால் வழக்கம் போல் பாபர் அசாம் பேட்டிங் செய்ய தடுமாறினார். தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே கேட்ச் ஆகி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதனால் பாகிஸ்தான் அணி 16 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு தொடக்க வீரர் சயிம் அயூப்பும், சவுத் ஷக்கிலும் ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

98 பந்துகளை எதிர்கொண்ட அயூப் 56 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதை அடுத்து சவுத் சக்கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். முகமது ரிஸ்வான் ஆட்டநேரம் முடிவில் 24 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 41 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. வங்கதேச பந்துவீச்சு தரப்பில் சோரிபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் முகமது தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். வங்கதேச பந்துவீச்சு தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் முகமது தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Story first published: Wednesday, August 21, 2024, 19:30 [IST]
Other articles published on Aug 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+