Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK vs BAN: பாகிஸ்தானை பொளந்த வங்கதேசம்.. ஒயிட்வாஷ் வெற்றி.. 23 வருட வரலாறு படைத்த வங்கதேச அணி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை அடுத்து வங்கதேசம் 2 - 0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்தது. சுமார் 23 ஆண்டுகளுக்கு பின்னர் வங்கதேச அணி வெளிநாட்டில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. அதிலும், பாகிஸ்தான் அணியை 2 0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் சையும் அயூப், ஷான் மசூத், சல்மான் ஆகா ஆகிய மூவரும் அரை சதம் அடித்தனர். பாகிஸ்தான் அணி 274 ரன்கள் எடுத்தது. அடுத்து வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 26 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. ஆனால், அப்போது லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹாசன் இணைந்து யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் எடுத்துச் சென்றனர்.

pakistan bangladesh

மெஹிதி ஹாசன் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். லிட்டன் தாஸ் அபாரமாக பேட்டிங் செய்து சதம் அடித்து 138 ரன்கள் எடுத்த ஆட்டம் இழந்தார். வங்கதேச அணி 262 ரன்கள் எடுத்தது. வெறும் 12 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்ற நிலையில் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடியது. 250 முதல் 300 ரன்கள் எடுத்தால்தான் கடின இலக்கை நிர்ணயித்து வெற்றி பெறலாம் என்ற அழுத்தத்தில் இருந்தது பாகிஸ்தான்.

ஆனால், அந்த அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் வங்கதேசம் சேஸிங் செய்தது. அந்த அணியின் வீரர்கள் விக்கெட்களை இழந்தாலும் ஓரளவு ரன் சேர்த்தனர். இதை அடுத்து நான்கு விக்கெட்கள் இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது வங்கதேசம். இதன் மூலம் இரண்டாவது டெஸ்ட் போட்டியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி கைப்பற்றி உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசம் இதற்கு முன் இரண்டு முறை மட்டுமே வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இருந்தது. 2001இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை 1 - 0 என கைப்பற்றியது. 2009 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என கைப்பற்றியது. 23 ஆண்டுகள் கழித்து தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என வங்கதேசம் வென்று வரலாறு படைத்துள்ளது.

மறுபுறம் பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் தொடர்ந்து 10 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற முடியாமல் மோசமான சாதனையை செய்துள்ளது. மேலும், ஷான் மசூத் டெஸ்ட் அணி கேப்டனாக பொறுப்பேற்ற பின் ஆடிய இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் பாகிஸ்தான் அணி ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்து இருக்கிறது. முன்னதாக ஆஸ்திரேலிய அணியிடம் 3 - 0 என தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, தற்போது வங்கதேசத்திடம் 2 - 0 என தோல்வி அடைந்துள்ளது.

Story first published: Tuesday, September 3, 2024, 15:40 [IST]
Other articles published on Sep 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+