For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

PAK vs BAN -திருப்பி அடித்த பாகிஸ்தான்..21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்! ஷாசாத் அபாரம்

ராவல்பிண்டி : பாகிஸ்தான் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் வங்கதேச அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. வங்கதேசத்திடம் சொந்த மண்ணில் தோல்வியை தழுவியதால் பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனம் எழுந்தது.

cricket pakistan cricket team

இதனால் பாகிஸ்தான் அணியை கலைத்து விட வேண்டும் என்று பல்வேறு ரசிகர்களும் கிரிக்கெட் வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி இரண்டாவது டெஸ்டில் களம் இறங்கியது. இதில் ஷாகின் அப்ரிடி பிளேயிங் லெவனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான அணி எந்த ஒரு சுழல் பந்துவீச்சாளரும் இல்லாமல் களமிறங்கியது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்டில் அப்ரார் அகமது என்ற லெக் ஸ்பின்னர் சேர்க்கப்பட்டார். இதனை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் தடுமாறியது. அப்துல்லா ஷபிக் டக் அவுட் ஆக அதிகபட்சமாக ஷையிம் அயூப் 58 ரன்களும், கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களும், சல்மான் அகா 54 ரன்களும் எடுத்தனர். நட்சத்திர வீரர் பாபர் அசாம் 31 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் பாகிஸ்தான் அணி 274 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இம்முறையும் பாகிஸ்தான் அணி தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வங்கதேச அணி இன்று பேட்டிங்கில் சுக்கு நூறாக உடைந்தது. பாகிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் தனது பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களுடைய ரத்தத்தில் ஊறிப்போன வேக பந்துவீச்சை இன்று வெளிப்படுத்தினர்.

பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் வங்கதேச அணி தடுமாறியது. அந்த அணியின் சதாப் இஸ்லாம் 10 ரன்களிலும், ஜாகிர் ஹசன் 1 ரன்னிலும், கேப்டன் நஜ்முல் ஹுசைன் நான்கு ரன்களிலும், மோமினுல் ஹக் ஒரு ரன்னிலும் முஸ்பிகுர் ரஹ்மான் மூன்று ரன்களிலும், சகிபுல் ஹசன் இரண்டு ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனால் வங்கதேச அணி 26 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் குர்ஆம் ஷாசாத் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோன்று இந்த போட்டியில் களமிறங்க மிர் ஹம்சா என்ற வேகப்பந்துவீச்சாளர் 25 ரன்ளை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் குறைவான ஸ்கோரை அடித்த நிலையில் வங்கதேசத்தை மிக எளிய இலக்கில் சுருட்டினார்.

முதல் இன்னிங்ஸில் பெரிய முன்னிலையை பாகிஸ்தான் பெற்று இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்கள் என்று இருப்பதால் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. தற்போது மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்கள் என்று இருப்பதால் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Story first published: Sunday, September 1, 2024, 12:44 [IST]
Other articles published on Sep 1, 2024
English summary
Pak vs Ban 2nd Test - Khurraam Shahzad stuns Bangladesh as they lose 21 runs for 6 wickets PAK vs BAN -திருப்பி அடித்த பாகிஸ்தான்..21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்! ஷாசாத் அபாரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+