Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK vs BAN: 46 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த பாகிஸ்தான்.. முதல் டி20 போட்டியில் வங்கதேசம் அபார வெற்றி

மிர்பூர்: வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டியில் பாபர் அசாம்,முகமது ரிஸ்வான் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் பக்கர் சமான், சையூம் ஆயூப், சல்மான் ஆகா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

வங்கதேச அணி இலங்கையை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி விட்டு தற்போது பாகிஸ்தானை எதிர்கொண்டு இருக்கிறது. மிர்பூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டிகள் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Pakistan vs Bangladesh

இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபக்கர் சமான் வழக்கம் போல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய சையும் அயூப் ஆறு ரன்களிலும், முகமது ஹாரிஸ் நான்கு ரன்களிலும், கேப்டன் சல்மான் ஆகா மூன்று ரன்களிலும் ஹசன் நவாஸ் டக்அவுட் ஆகியும் முஹம்மது நவாஸ் மூன்று ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

இதனால் பாகிஸ்தான அணி 46 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.பக்கர் சமான் மட்டும் தனி ஆளாக போராடி 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் குர்ஷ்தில் ஷா 17 ரன்களிலும், அப்பாஸ் அபிரிடி 22 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 110 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்கியது.

இதில் தொடக்கம் வீரர் டன்சித் ஹசன் 1 ரன்னில் ஆட்டம் இழக்க, பர்வேஸ் உசைன் அபாரமாக விளையாடி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சுளுக்கு எடுத்தார். மறுமுனையில் கேப்டன் லிட்டன் தாஸ் 1 ரன்னில் வெளியேறினார். மேலும் பர்வேஸ் 5 சிக்சர்கள் மூன்று பவுண்டரி என 39 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். அதேபோன்று தவ்ஹீத் ஹிர்தாய் 36 ரன்களும், ஜேக்கர் அலி 15 ரன்களும் எடுக்க வங்கதேச அணி 15 புள்ளி 3 ஓவரின் எல்லாம் வெறும் மூன்று விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

Story first published: Sunday, July 20, 2025, 21:35 [IST]
Other articles published on Jul 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+