Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK vs BAN: பாகிஸ்தானுக்கு தலைகுனிவு.. வங்கதேசத்திடம் படுதோல்வி.. ஒருநாள் தொடரை இழந்தது!

மிர்பூர்: 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணி, தற்போது வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் இழந்து மோசமான சரிவை சந்தித்துள்ளது. மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசத்தில் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட சென்றது. முன்னதாக 2015 ஆம் ஆண்டு நடந்த தொடரையும் 3-0 என பாகிஸ்தான் இழந்திருந்தது. இந்த நிலையில் தற்போது நடந்த ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான், 2வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்தது. ஆனால் தொடரை தீர்மானிக்கும் முக்கியமான 3வது போட்டியில் மீண்டும் தோல்வியை தழுவியது.

PAK vs BAN Bangladesh Defeats Pakistan in ODI Series Historic Victory in Mirpur Following T20 World Cup Exit

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் தன்சித் ஹசன் அபாரமாக விளையாடி தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். அவர் 107 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 107 ரன்கள் விளாசினார். மேலும் லிட்டன் தாஸ் 41 ரன்களும், தவ்ஹித் ஹிருதாய் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 291 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஃபர்ஹான் 6, மாஸ் சதாக்கத் 6, முகமது ரிஸ்வான் 4 என அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், சல்மான் அகா தனி ஆளாகப் போராடி 98 பந்துகளில் 106 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார். அவருக்குத் துணையாக சாத் மசூத் 38, ஷாஹீன் அப்ரிடி 37, அப்துல் சமத் 34 ரன்கள் எடுத்தனர்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரிஷாத் ஹொசைன் வீசிய பந்தில் ஷாஹீன் அப்ரிடி ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 11 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக வீழ்ந்தது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தொடர் வெற்றியை உறுதி செய்தனர். டி20 உலகக்கோப்பையை தவறவிட்ட வங்கதேச அணிக்கு இந்த வெற்றி மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.

Story first published: Monday, March 16, 2026, 7:29 [IST]
Other articles published on Mar 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+