Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாங்க 500 ரன் எடுப்போம்.. அவங்களை 50 ரன்ல அவுட் ஆக்குவோம்.. குபீர் சிரிப்பை வரவழைத்த பாக். கேப்டன்!

Recommended Video

World Cup 2019: Pak Vs Ban : 500 ரன்கள் எடுத்து அரை இறுதிக்குள் நுழைவோம்.. சர்பராஸ் அடடே பேச்சு

லண்டன் : பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மது வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன் பேசுகையில் பாகிஸ்தான் அணி 500 - 550 ரன்கள் குவிக்கும் என்று கூறி கிச்சுகிச்சு மூட்டி இருக்கிறார்.

வங்கதேச அணியை 50 ரன்களில் சுருட்டுவோம் என்று அவர் பேசியதை கேட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் கேப்டன் அப்படி கூறியதற்கு முக்கிய காரணம் இதுதான். பாகிஸ்தான் அணி அரையிறுதி செல்ல அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தோல்விகள்

தோல்விகள்

பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை லீக் சுற்றில் தன் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மிக மோசமாக தோற்றது. அதன் பின் நான்கு வெற்றிகளை பெற்றது. வங்கதேச அணிக்கு எதிரான கடைசி போட்டி தான் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை முடிவு செய்ய உள்ளது.

அரையிறுதி வாய்ப்பு

அரையிறுதி வாய்ப்பு

வங்கதேச அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றால், புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்கு இணையாக 11 புள்ளிகள் பெறும். எனினும், நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்தை விட பின்தங்கி இருக்கும்.

வங்கதேசப் போட்டி சிக்கல்

வங்கதேசப் போட்டி சிக்கல்

நியூசிலாந்து அணியை விட பாகிஸ்தான் அதிக ரன் ரேட் பெற வேண்டும் என்றால், வங்கதேச அணியை வீழ்த்தி, குறைந்தபட்சம் 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். பாகிஸ்தான் அணி இருக்கும் நிலையில், இது சாத்தியமே இல்லை., மேலும், வங்கதேச அணி உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக கிரிக்கெட் ஆடினார்கள்.

5௦௦ ரன்

5௦௦ ரன்

இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மது-விடம் இந்த போட்டிக்கான திட்டம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பாகிஸ்தான் அணி 500 ரன்கள் எடுக்கும், எதிரணியை 50 ரன்களில் ஆட்டமிழக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

ரசிகர்கள் கிண்டல்

இதைக் கேட்டு ரசிகர்கள் சர்ப்ராஸ் அஹ்மதை கிண்டல் செய்து வருகிறார்கள். வங்கதேச ரசிகர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் ரசிகர்களும் அவரை கிண்டல் செய்து இருக்கிறார்கள்.

Story first published: Friday, July 5, 2019, 15:31 [IST]
Other articles published on Jul 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+