For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Pak vs Ban - ஒவ்வொரு அணிக்கு எதிராக வங்கதேசம் எத்தனையாவது டெஸ்டில் முதல் வெற்றி பெற்றது

ராவல்பிண்டி : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக கத்துக்குட்டி அணி ஆகவே கருதப்பட்ட வங்கதேச அணி சமீப காலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அண்மையில் கிரிக்கெட்டுக்கு வந்த ஆப்கானிஸ்தான் அணி கூட குறிப்பிட தகுந்த வெற்றியைப் பெற்று சாதிக்கிறது.

ஆனால் வங்கதேச அணி மட்டும் இன்னும் தங்களுடைய முழு திறமையை சர்வதேச கிரிக்கெட்டில் வெளிப்படுத்தவே இல்லை. 2000 ஆண்டு தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய வங்கதேசம் இதுவரை 143 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறது.

pak vs ban Shakib al hasan cricket mohammed rizwan

இதில் 105 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியும் வெறும் 20 போட்டிகளில் வெற்றியும் 18 போட்டிகளில் டிராவும் அடைந்திருக்கிறது. இந்த நிலையில் வங்கதேச அணி தாங்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் எத்தனை போட்டிகளில் விளையாடி முதல் வெற்றியை பெற்றிருப்பது என்பதை தற்போது பார்க்கலாம். இலங்கை அணி எதிராக வங்கதேச அணி தங்களுடைய 18வது டெஸ்ட் போட்டியில் தான் முதல் வெற்றியை பெற்றது.

நியூசிலாந்துக்கு எதிராக 16வது டெஸ்ட் போட்டிகள் தான் வங்கதேச அணி முதல் வெற்றியை பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக வங்கதேச அணி 16வது டெஸ்ட் போட்டியில் தான் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக தங்களது பத்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியை பெற்றுள்ள வங்கதேச அணி ஜிம்பாவேக்கு எதிராக தங்களுடைய ஏழாவது டெஸ்டில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தங்களுடைய ஐந்தாவது டெஸ்டில் வெற்றியை பதிவு செய்த வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தங்களுடைய ஐந்தாவது டெஸ்டில் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய இரண்டாவது டெஸ்டில் முதல் வெற்றியை பதிவு செய்த வங்கதேச அணி அயர்லாந்துக்கு எதிராக தங்களுடைய முதல் டெஸ்டில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

இன்னும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச அணி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. இந்தியாவுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளும் வங்கதேச அணி விளையாடி இருக்கிறது.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் வங்கதேசம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பாகிஸ்தானை வீழ்த்திய உத்வேகத்துடன் வங்கதேச அணி இருக்கும் என்பதால் இந்த தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, August 26, 2024, 15:30 [IST]
Other articles published on Aug 26, 2024
English summary
Pak vs Ban - How many test Bangladesh takes to register the first win vs every opponent Pak vs Ban - ஒவ்வொரு அணிக்கு எதிராக வங்கதேசம் எத்தனையாவது டெஸ்டில் முதல் வெற்றி பெற்றது
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+