Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

28 ஆண்டுகளில் 2வது முறை.. சுழற்பந்துவீச்சாளரே இல்லாமல் களமிறங்கும் பாகிஸ்தான்.. என்ன நடந்தது?

கராச்சி : பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ஆம் தேதி ராவல்பிண்டி நகரில் தொடங்கியது. இந்த முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி முற்றிலும் வேக பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் 28 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் இரண்டாவது முறையாக சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் விளையாடுகிறது. மேலும் பாகிஸ்தான் அணியில் இருக்கும் ஒரே சூழற்பந்து வீச்சாளரான அப்ரார் அகமது தற்போது டெஸ்ட் அணியில் இருந்து விலக்கப்பட்டு இருக்கிறார்.

cricket Pak vs Ban Babar azam


இதன் காரணமாக அணியில் வேறு எந்த சுழற் பந்துவீச்சாளரும் இல்லாததால் முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. இதற்கு காரணம் வங்கதேச அணிக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில் விளையாட பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். அதனால் 1995 ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணி 28 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் விளையாடுகிறது. இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அசார் அலி, தலைமையில் பாகிஸ்தான் அணி முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சாளர்களுக்கு களம் இறங்கியது.

ராவல்பிண்டி ஆடுகளம் சிமெண்ட் ரோடு போல் இருக்கும். ஆடுகளம் பந்து பவுன்ஸ் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சாளரை வைத்து பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. பாகிஸ்தான் அணியின் இந்த நடவடிக்கை ரசிகர்களை ஆச்சரியமடை செய்திருக்கிறது. பாகிஸ்தான் அணியின் இந்த வித்தியாசமான முயற்சி அவர்களுக்கு கைகொடுக்குமா?

இல்லை வங்கதேசம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கராச்சியின் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்களான அப்ரார் மற்றும் குலாம் என இருவரும் அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, August 18, 2024, 20:26 [IST]
Other articles published on Aug 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+