Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK vs BAN: வங்கதேசத்தை சமாளிக்க முடியாமல் திணறும் பாகிஸ்தான்.. 4வது முறை டக் அவுட்டான இளம் ஸ்டார்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வாழ்வா? சாவா? என்ற ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடி வரும் பாகிஸ்தான அணி 5 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. குறிப்பாக அந்த அணியின் இளம் நட்சத்திர வீரரான சையும் அயூப் கடைசியாக விளையாடிய 6 இன்னிங்ஸில் நான்காவது முறையாக டக் அவுட் ஆகி இருக்கிறார்.

துபாயில் நடைபெற்று வரும் சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதும். தோல்வியை பெரும் அணி தொடரை விட்டு வெளியேறிவிடும்.

Pak vs Ban

இந்த நிலையில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் அதிரடியாக விளையாட முயற்சி செய்தது. குறிப்பாக பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரரான பர்ஹான், நல்ல பார்மில் இருந்தார்.

அந்த அணியில் கடைசியாக விளையாடிய 6 இன்னிங்ஸில் 156 ரன்கள் அவர் அடித்திருந்தார். ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் தடுமாறிய போது இந்தியாவுக்கு எதிராக அவர் மட்டும் லீக் சுற்றில் 40 ரன்களும், சூப்பர் ஃபோர் சுற்றில் 58 ரன்கள் அடித்திருந்தார். இதனால் ஃபர்ஹான் இன்று பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி காப்பாற்றப்படும் என்ற நிலையில் இருந்தது.

பாகிஸ்தான் தடுமாற்றம்:

ஆனால் முதல் ஓவரிலேயே யாரும் எதிர்பாராத வகையில் டஸ்கின் அகமது வீசிய பந்தில் பர்ஹான் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் நான்கு ரன்களுக்கு முதல் விக்கெட்டை பாகிஸ்தான் அணி இழந்தது. இதனை அடுத்து இளம் நட்சத்திர வீரர் சயும் அயூப் களத்திற்கு வந்தார். இந்த தொடரில் அவர் ஏற்கனவே மூன்று முறை டக் அவுட் ஆகி இருந்தும், சயூம் அயூப்க்கு பாகிஸ்தான் அணி ஆதரவு அளித்திருந்தது.

பாகிஸ்தான் அணி வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தில் இரண்டாவது ஓவரில் சுழற் பந்துவீச்சாளர் மெகதி ஹசன் வீசிய பந்தை அடித்து ஆட முற்பட்டு அயுப் கேட்சனார். சையூம் அயூப் ஷாட் தேர்வில் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவர் ஆட்டம் இழந்து வருகிறார். இது மூலம் மீண்டும் அவர் டக் அவுட் ஆனதால் பாகிஸ்தான் அணி 5 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது. பவர் பிளேக்குள் பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறுவதால், அந்த அணி பெரிய ஸ்கோரை குவிக்குமா? வங்கதேசத்தை வீழ்த்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Thursday, September 25, 2025, 20:36 [IST]
Other articles published on Sep 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+