Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK vs BAN: பாகிஸ்தான் அணி சொதப்பல் பேட்டிங்.. பொளக்கும் ரசிகர்கள்.. வங்கதேச அபார பந்துவீச்சு

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வாழ்வா சாவா என்ற ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றில் அணி பேட்டிங்கில் தடுமாறி இருக்கிறது. துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஃபர்கான் ஆட்டத்தில் நான்காவது பந்திலே அவுட் ஆனார். இதனை அடுத்து ஆட்டத்தில் இரண்டாவது ஓவரில் இளம் நட்சத்திர வீரர் சயூம் அயூப் மூன்று பந்துகளை எதிர் கொண்டு டக் அவுட்டானார்.

Pak vs Ban

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் 6 இன்னிங்சில் நான்கு முறை அவர் டக் அவுட் ஆகி இருக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பக்கர் சாமான் இரண்டு பவுண்டரிகள் அடித்த நிலையில் 20 பந்துகளை எதிர் கொண்டு வெறும் 13 ரன்கள் மட்டுமே அவர் சேர்த்தார். இந்த தருணத்தில் களத்திற்கு வந்த கேப்டன் சல்மான் ஆகா, அணியை தூக்கி நிறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

23 பந்துகளை எதிர் கொண்டு இரண்டு பவுண்டரிகள் அடித்த நிலையில் 19 ரன்களில் அவரும் பெவிலியன் திரும்பினார். நடு வரிசையில் விளையாடிய ஹுசைன் தலாக் மூன்று ரன்களில் ஆட்டம் இழக்க பாகிஸ்தான் அணி 49 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் மீண்டும் பௌலர்கள் தான் பாகிஸ்தான் அணியை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இருந்தது. களத்திற்கு வந்து ஷாகின் ஆப்ரிடி இரண்டு சிக்ஸர்கள் அடித்த நிலையில் 13 பந்துகளில் அவர் 19 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதேபோன்று மற்றொரு ஆல்ரவுண்டரான முஹம்மத் நவாஸ் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டர் என 15 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார்.

இந்த ஜோடி பாகிஸ்தான் அணியை கௌரவமான இலக்கிற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய கட்டத்தில் இருவரும் பெவிலியன் திரும்பினர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஒவ்வொரு முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேச பந்துவீச்சு தரப்பில் டஸ்கின் அகமத் மூன்று விக்கெட்டுகளையும், மகதி ஹசன் மற்றும் ரிஷாத் உசேன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Story first published: Thursday, September 25, 2025, 22:04 [IST]
Other articles published on Sep 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+