Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசத்திற்கு எதிரான தோல்வி.. இனி உலக டெஸ்ட் பைனலுக்கு தகுதி பெறுமா பாகிஸ்தான்.. வாய்ப்பு இருக்கா?

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டிலே கணிக்க முடியாத அணி என்றால் அது பாகிஸ்தான் தான். அவர்கள் எப்போது எப்படி விளையாடுவார்கள்? யாரிடம் எப்படி வெற்றி பெறுவார்கள்? அதிர்ச்சி தோல்வியை தழுவார்கள் என்று கணிக்கவே முடியாது. அதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஸ்டைல்.

திடீரென்று பெரிய அணிக்கு எதிராக அபாரமாக விளையாடும் பாகிஸ்தான் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் கத்துக் குட்டி அணியினர் தோல்வியை தழுவார்கள். இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரை இழந்து இருக்கிறது.

pakistan bangladesh

இதன் மூலம் பாகிஸ்தான் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வாய்ப்பு இருக்கிறதா என்பதை தற்போது பார்க்கலாம். பாகிஸ்தான் அணிக்கு இன்னும் ஏழு டெஸ்ட் போட்டிகள் பாக்கி இருக்கிறது.

இதில் பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன் பிறகு இரண்டு மாதம் இடைவெளி எடுத்துக் கொள்ளும் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தலா இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்தப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி அனைத்திலும் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இதில் ஒரு டிரா அடைந்தால் கூட பாகிஸ்தான் அணியின் பைனல் வாய்ப்பு பறிபோக நேரிடும். தற்போது வரை பாகிஸ்தான் ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு.

ஆனால் பாகிஸ்தானை நாம் முன்பு சொன்னது போல் சாதாரணமாக கணித்து விட முடியாது. உதாரணத்துக்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. அப்போது பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி பைனலில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது.

இதனால் இப்போதும் பாகிஸ்தான் அணி வங்கதேசத்துடன் தோல்வியை தழுவியது என்று குறைத்து மதிப்பிட முடியாது. கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் பாகிஸ்தான் பைனலுக்கு போகுமா போகாதா என்பதில் காலம் தான் பதில் சொல்லும். ஆனால் தற்போது இருக்கும் பாகிஸ்தானின் பார்மை வைத்து பார்த்தால் அவர்களால் அடுத்த ஏழு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி அக்டோபர் 7ஆம் தேதி தொடங்குகிறது. இதேபோன்று தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி அங்கு மூன்று டி20 மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் டிசம்பர் எட்டாம் தேதி தொடங்குகிறது.

இதனை எடுத்து பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஜனவரி 16 மற்றும் 24 ஆம் தேதி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. வங்கதேச அணியை பொறுத்தவரை அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அடுத்ததாக செப்டம்பர் 19ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார்கள். அதிலும் அவர்கள் அதிர்ச்சி வெற்றியை பெற்றால் யாருமே எதிர்பார்க்காத விதமாக பைனலுக்கு வங்கதேசம் தகுதி பெற வாய்ப்பு இருக்கிறது. அப்படி தகுதி பெறவில்லை என்றாலும் அந்தப் பந்தயத்தில் வங்கதேசம் இருக்கும்.

Story first published: Tuesday, September 3, 2024, 22:50 [IST]
Other articles published on Sep 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+