PAK vs BAN - ரிஸ்வான் தலையை பார்த்து பந்தை எறிந்த ஷகிபுல் ஹசன்.. எச்சரிக்கை கொடுத்த நடுவர்.. வீடியோ
ராவல்பிண்டி : பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரர் ஷகிபுல் ஹசன் தலையை பார்த்து பந்தை எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ராவல்பிண்டி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் 171-ரன்களும் சவுத் ஷகில் 142 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியில் முஸ்பிகுர் ரஹிம் அபாரமாக விளையாடி 191 ரன்கள் எடுத்தார். மெஹந்தி ஹசன் 77 ரன்களும், லிட்டன்தாஸ் 56 ரன்களும், ஷத்மான் இஸ்லாம் 93 ரன்களும் எடுக்க வங்கதேச அணி 565 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 117 ரன்கள் பின் தங்கிய பாகிஸ்தான் அணி தற்போது இரண்டாவது இன்னிங்சில் தடுமாறி வருகிறது. இதில் பாகிஸ்தான அணி 37.3 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்திருக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. வங்கதேச அணியின் கை ஓங்கி இருக்கும் நிலையில் அந்த அணி வீரர் ஷகிபுல் ஹசன் செய்த ஒரு செயல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது .முகமது ரிஸ்வான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஷகிபுல் ஹசன் பந்து வீச வந்தார். அப்போது ரிஸ்வான், ஷகிபுல் ஹசனை நிற்க சொல்லிவிட்டு, பேட்டிங் செய்ய தயாராக முயன்றார்.
இதனால் ஷகிபுல் ஹசன் கடுப்பாகி பந்தை நின்று கொண்டே ரிஸ்வான் தலையை பார்த்து எறிந்தார். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ரிஸ்வான் பயந்து கீழே குனிந்து விட்டார். இதனை அடுத்து உடனடியாக நடுவர் இந்த பந்தை செல்லாது என அறிவித்ததுடன் மட்டுமல்லாமல் சகிபுல் ஹசனுக்கு எச்சரிக்கை கொடுத்தார்.
ரிஸ்வான் கையை காட்டி விட்டு தாம் இன்னும் தயாராகவில்லை என்பதை தெரியப்படுத்திய பின்பும் பந்தை எரிந்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தற்போது பல சிக்கல்களின் மாட்டியுள்ள நிலையில் இதுபோன்று அவர் ஈடுபடும் செயல் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இதனால் நல்ல மனநிலையில் தான் சகிபுல் ஹசன் இருக்கிறாரா என்பதில் சோதிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications