For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

PAK vs BAN - ரொம்ப ஏமாற்றமா இருக்கு! உடல்தகுதியே எங்கள் வீரர்களுக்கு இல்லை.. பாக். கேப்டன் கருத்து

ராவல்பிண்டி : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இழந்தது. இதன் மூலம் வங்கதேசம் போல ஒரு பலம் குன்றிய அணியிடம் பாகிஸ்தான் அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி தொடரை இழந்திருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத், இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.அதனை தற்போது பார்க்கலாம். இந்த தோல்வி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. நாங்கள் சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம்.

pakistan bangladesh

10 மாதங்களாக நாங்கள் எந்த ஒரு டெஸ்ட் போட்டியும் விளையாடவில்லை. ஆனால் எங்களுடைய கதை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆஸ்திரேலியாலில் நாங்கள் வெற்றி பெற வேண்டிய டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவினோம். நாங்கள் அடைந்த தோல்வியில் இருந்து எந்த பாடமும் கற்றுக் கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன்.

நாங்கள் ஆஸ்திரேலியாவில் நல்லவிதமான கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெறாமல் விட்டு விட்டோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி போட்டியை முடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த டெஸ்ட் போட்டியில் கூட எங்களுக்கு வெற்றி பெற இரண்டு வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் வங்கதேசத்தை 26 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெறும் வாய்ப்பில் இருந்தோம்.

ஆனால் மீண்டும் வங்கதேச அணி ரன் குவித்து பேட்டிங் செய்ய நாங்கள் வழி ஏற்படுத்தி விட்டோம். என்னுடைய பதவி காலத்தில் இப்படி நான்கு போட்டிகளில் அடுத்தடுத்து நடந்து விட்டது. எனவே இது குறித்து நாங்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். முதலில் டெஸ்ட் கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எங்களுடைய தோல்விக்கு முக்கிய காரணம் உடல் தகுதி என்று நான் நினைக்கின்றேன். முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் வைத்து விளையாடினோம். இது போன்ற கால சூழ்நிலையில், நான்கு வேக பந்துவீச்சாளர் வைத்து விளையாடுவது எல்லாம் சரியான முடிவாக இருக்காது. இதில் மூன்று வேக பந்துவீச்சாளர்களுக்கு கடும் பணிச்சுமை ஏற்பட்டிருக்கும்.

ஒரு சுழற் பந்துவீச்சாளர் வைத்து இந்த டெஸ்டில் நாங்கள் விளையாடினோம். அதுவும் சரியான முடிவாக இல்லை. நாங்கள் முஹம்மத் அலி பயன்படுத்த நினைத்தோம். ஆனால் அவரும் உடல் நலம் குன்றி விட்டார். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் உங்களுக்கு நல்ல உடல் தகுதி இருக்க வேண்டும். பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் சரி பவுலராக இருந்தாலும் சரி ஐந்து நாட்களுக்கு மேல் நீங்கள் காலத்தில் நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.

எங்கள் அணி வீரர்கள் அதில் பின்தங்கி இருக்கிறார்கள் என நினைக்கின்றேன். நாங்கள் டாசை இழந்து 274 ரன்கள் எடுத்தது நல்ல ஸ்கோர் ஆக பார்க்கிறேன். அதேசமயம் 26 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை எடுத்துவிட்டு ஒரு போட்டியில் தோல்வியை தருவதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்.தவறு என்று பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் நாங்கள் பலமான அணியாக திரும்புவோம்.

இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை நாங்கள் வழங்குவோம். ஷாகின் அப்ரிடி தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதால் தான் அவருக்கு இந்த டெஸ்டில் நாங்கள் ஓய்வு வழங்கினோம். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடர் இருக்கிறது. அதில் நாங்கள் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நம்புகிறேன் என ஷான் மசூத் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, September 3, 2024, 17:58 [IST]
Other articles published on Sep 3, 2024
English summary
Pak vs Ban - We are Really very disappointed says Pakistan captain Shan Massod PAK vs BAN - ரொம்ப ஏமாற்றமா இருக்கு! உடல்தகுதியே எங்கள் வீரர்களுக்கு இல்லை.. பாக். கேப்டன் கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+