Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் என்ன? பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விளக்கம்

நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான அணி தங்களுடைய முதல் வெற்றியை இன்று கனடாவுக்கு எதிராக பெற்றது. அமெரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியை தழுவிய நிலையில், எஞ்சிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இந்த நிலையில் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அவர்களுடைய 100 அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு தகுந்தார் போல் கனடா அணியும் 106 ரன்களில் ஆட்டம் இழந்தது.

t20 world cup babar azam mohammed rizwan cricket 20 2024

இதனால் பாகிஸ்தான் அணி 15 ஒவருக்குள் இந்த இலக்கு எட்டி ரன் ரேட்டை உயர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணியால் 17.3 வது ஓவரில் தான் இந்த வெற்றி இலக்கை எட்ட முடிந்தது. இந்த நிலையில் இதற்கான காரணம் குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் விளக்கம் அளித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் இந்த வெற்றி எங்களுக்கு நிச்சயம் நல்லது தான் என்று நினைக்கின்றேன். இந்த வெற்றி எங்களுக்கு முக்கியம். நாங்கள் பந்துவீச்சில் நல்ல முறையில் ஆட்டத்தை தொடக்கினோம். முதல் 6 ஓவர்களில் நாங்கள் எதிர்பார்த்தது நடந்தது. எனினும் இந்த போட்டியை நாங்கள் 14வது ஓவருக்குள் முடித்து அமெரிக்காவின் ரன் ரேட்டுக்கு மேல் செல்ல வேண்டும் என எதிர்பார்த்தோம்.

ஆனால் ஆடுகளம் மிகவும் கடுமையாக இருந்தது. பந்தை அடிக்கவே முடியவில்லை. இதனால் எங்களால் எதிர்பார்த்தபடி போட்டியை விரைவாக முடிக்க முடியவில்லை. இந்த ஆடுகளத்தில் முதல் ஆறு ஓவர் என்பது மிகவும் முக்கியம். இந்த ஆறு ஓவர் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து தான் அதன் பிறகு ஆட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

முதலில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக ஆட வேண்டும் என்று நினைத்தோம். தொடர்ந்து அதிரடி காட்டி விரைவாக ஷேர் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். தற்போது கடைசி போட்டி புளோரிடாவில் நடக்க இருக்கிறது. இந்த ஆடுகளத்தை ஒப்பிட்டால் அங்கு ரன் குவிக்க வாய்ப்பு ஏதுவாக இருக்கும் என்று நினைக்கின்றேன். நான் ஒரே ஷாட்டில் ஆடி தேவை இல்லாமல் ஆட்டம் இழந்து வருகின்றேன். அது எனக்கு கோபத்தை தான் கொடுக்கின்றது. நிச்சயம் என்னுடைய பணியை நான் சிறப்பாக செய்வேன் என்று பாபர் அசாம் கூறியிருக்கிறார்.

Story first published: Wednesday, June 12, 2024, 0:02 [IST]
Other articles published on Jun 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+