Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விடாத கருப்பு! கனடா அணியில் இடம்பெற்று இருக்கும் 3 இந்தியர்கள்..பாகிஸ்தானுக்கு காத்திருக்கும் அபாயம்

நியூயார்க்: டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் கனடா அணியை இன்று மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். ஆனால் போட்டி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான நியூயார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே அமெரிக்காவிடம் தோற்ற நிலையில் தற்போது கனடாவை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று அந்த அணி ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். அதற்கு ஏற்ற வகையில் கனடா அணியிலும் மூன்று இந்திய வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் பாகிஸ்தானுக்கு அந்த மூன்று பேரும் எப்படி சவால் கொடுப்பார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

t20 world cup babar azam indian national cricket team cricket 20 2024

கனடா அணி அமெரிக்காவுக்கு எதிராக பெரிய இலக்கை நிர்ணயித்து தோல்வியை தழுவினாலும், பலம் வாய்ந்த அயர்லாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது. கனடா அணியில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்றால் அது இந்தியாவை சேர்ந்த நவனித் தாலிவால் தான். சந்திகரில் பிறந்த நவநீத் டி20 உலக கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 44 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார்.

இவர் நிக்கோலஸ் கிரிட்டனுடன் அமைத்த பார்ட்னர்ஷிப்பால் தான் கனடா அணி 194 ரன்கள் குவித்தது. அயர்லாந்துக்கு எதிராக நவநீத் 6 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் ஆன ஸ்ரேயாஸ் மூவா. இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் 16 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார்.

குறிப்பாக கடைசி ஓவரில் இவர் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். இதேபோன்று அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கனடா தடுமாறிய போது முக்கிய கட்டத்தில் 36 பந்துகளின் 37 ரன்கள் சேர்த்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினார்.இதனால் ஸ்ரேயாஸ் மூவா பாகிஸ்தானுக்கு சவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்திருக்கும் வீரர் தில்ப்ரீக் பாஜ்வா.

இவர் கடைசியாக அமெரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் சராசரியாக 44 ரன்கள் அடித்து இருந்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் இன்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பெரிய இன்னிங்ஸ் ஆட வாய்ப்பு இருக்கிறது. இந்த மூன்று இந்திய வீரர்களும் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, June 11, 2024, 17:26 [IST]
Other articles published on Jun 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+