Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சதம் விளாசி சம்பவம் செய்த பென் டக்கெட்.. 14 ரன்களுக்கு 4 விக்கெட்ஸ்.. பாகிஸ்தான் தரமான பதிலடி!

முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் பென் டக்கெட் சதம் விளாசி அசத்தியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி தரப்பில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளது விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி முல்தான் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் ஏராளமான மாற்றங்களை செய்து களமிறங்கியுள்ளது. அதேபோல் முல்தான் ஆடுகளத்தை ஸ்பின்னர்களுக்கு சாதகமக மாற்றியுள்ளது.

pak vs eng england ben stokes

இதன்பின் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து நடந்த 2வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆமீர் ஜமால் மற்றும் நோமன் அலியின் பொறுப்பான ஆட்டத்தில் 366 ரன்களுக்கு அல் அவுட்டாகியது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன்பின் இங்கிலாந்து அணியின் கிராலி - டக்கெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில், கிராலி 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த போப் 29 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பென் டக்கெட் அதிரடியாக ரன்களை குவித்து வந்தார். பின்னர் டக்கெட் - ஜோ ரூட் கூட்டணி இணைந்து நிதானமாக ரன்களை சேர்த்து வந்தது. சிறப்பாக ஆடிய டக்கெட் 120 பந்துகளில் சதத்தை எட்டி அசத்தினார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் டக்கெட் அடிக்கும் 4வது சதம் இதுவாகும். ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் என்று பாகிஸ்தான் ஸ்பின்னர்களை டக்கெட் அட்டாக் செய்த விதம் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இவர்களின் பார்ட்னர்ஷிப் 99 ரன்களை எட்டிய போது, சாஜித் கான் பவுலிங்கில் ஜோ ரூட் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சாஜித் கான் வீசிய அடுத்த ஓவரில் டக்கெட் 114 ரன்களிலும், ஹாரி ப்ரூக் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 225 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெறும் 14 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது அந்நாட்டு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, October 16, 2024, 17:59 [IST]
Other articles published on Oct 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+