Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எந்த கொம்பனாலும் முறியடிக்க முடியாத டெஸ்ட் சாதனை.. கெத்தாக நிற்கும் பிரையன் லாரா ரெக்கார்டு!

முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முல்தான் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் முச்சதம் அடித்தார். இதன் மூலம் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் ஹாரி ப்ரூக். அவர் அதிரடியாக ஆடி வந்த நிலையில் பிரையன் லாராவின் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த சாதனையை முறியடிப்பாரா? என்ற ஆர்வம் எழுந்தது.

ஆனால், ஹாரி ப்ரூக் 317 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், 20 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனை சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் அடித்தார் பிரையன் லாரா.

pak vs eng pakistan england

அதுவே இன்று வரை ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் ஒரு இன்னிங்ஸில் ஒரு வீரர் அடித்த அதிக ஸ்கோராக உள்ளது. 20 ஆண்டுகளாக எந்த ஒரு வீரராலும் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை. அதற்கு முன் 1994 ஆம் ஆண்டு பிரையன் லாரா 375 ரன்கள் அடித்திருந்தார். அந்த சாதனை 19 ஆண்டுகளாக எந்த ஒரு வீரராலும் முறியடிக்க முடியாத சாதனையாக இருந்தது.

பின்னர் 2003 அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் அந்த சாதனையை முறியடித்து 380 ரன்கள் சேர்த்து இருந்தார். ஆனால், அடுத்த ஆறு மாதங்களிலேயே மேத்யூ ஹைடன் சாதனையை முறியடித்து பிரையன் லாரா 400 ரன்கள் சேர்த்தார். அதன் பின் எந்த ஒரு வீரரும் அந்த சாதனைக்கு அருகே கூட செல்லவில்லை. இந்த 20 ஆண்டுகளில் அதிகபட்சமாக மகிளா ஜெயவர்த்தனை 374 ரன்கள் சேர்த்து இருந்தார்.

பிரையன் லாரா 400 ரன்கள் அடித்ததற்கு பின் 13 வீரர்கள் முச்சதம் அடித்து உள்ளனர். ஆனால், யாராலும் அவரது சாதனையை முறியடிக்க முடியவில்லை. இதில் ஐந்து வீரர்கள் 300 ரன்கள் அடித்த பின் நாட் அவுட் ஆக இருந்துள்ளனர். ஒருவேளை அவர்கள் முழுவதுமாக ஆடி இருந்தால் 400 ரன்களை எட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.

ஆனால், பெரும்பாலும் போட்டியின் சூழ்நிலை காரணமாக அவர்களால் அதற்கு மேல் ஆட முடியாமல் போனது. அந்த வகையில் பார்த்தால் 400 ரன் அடிக்க வேண்டும் என்றால் ஒரு வீரர் அந்த அணியில் இருக்கும் மற்ற பேட்ஸ்மேன்களை விட அதிவேகமாகவும், போட்டி சூழ்நிலையை முற்றிலும் தன்னை சுற்றி அமைத்துக் கொண்டு ரன் சேர்க்க வேண்டும்.

அந்த வகையில் பிரையன் லாரா செய்தது அசாத்தியமான சாதனையாகவே உள்ளது. இனி வரும் நாட்களிலாவது அந்த சாதனையை எந்த வீரராவது முறியடிப்பாரா?

Story first published: Friday, October 11, 2024, 18:45 [IST]
Other articles published on Oct 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+