Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

59 ஆண்டுகளில் முதல்முறை.. முச்சதம் விளாசி ஹாரி ப்ரூக் மெகா சாதனை.. பாகிஸ்தான் அணி கவலைக்கிடம்!

முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் 310 பந்துகளில் 3 சிக்ஸ், 29 பவுண்டரிகள் உட்பட முச்சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக கடந்த 59 ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்காக முச்சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ஹாரி ப்ரூக் படைத்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பந்தாடி வருகின்றனர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 556 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் முல்தான் மைதானத்தின் பிட்சை இங்கிலாந்து ஜாம்பவான்கள் பலரும் கடுமையான விமர்சித்தனர்.

pak vs eng england harry brook

இந்த நிலையில் பிட்சை விளாசிய இங்கிலாந்து ஜாம்பவான்களே, தற்போது பாகிஸ்தான் பவுலர்கள் பாவம் என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 800 ரன்களை கடந்துள்ளது. 4வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் இருவரும் 454 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தனர்.

பின்னர் ஜோ ரூட் 375 பந்துகளில் 262 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுபக்கம் நின்றிருந்த ஹாரி ப்ரூக் 250 ரன்களை கடந்தும் அதிரடியில் பொளந்து கட்டினார். ஆட்டத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் எடுத்து கொண்ட ஹாரி ப்ரூக், நின்றால் பவுண்டரி, நடந்தால் சிக்ஸ் என்று ரீதியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் முச்சதம் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் சயீம் அயூப் வீசிய பந்தில் எளிதாக ஒரு பவுண்டரியை விளாசி 310 பந்துகளில் 3 சிக்ஸ், 29 பவுண்டரி உட்பட 300 ரன்களை விளாசி புதிய சாதனை படைத்தார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக முச்சதம் விளாசிய 6வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதேபோல் 1965ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியின் ஜான் எட்ரிச் 310 ரன்களை விளாசி இருந்தார்.

அதன்பின் 59 ஆண்டுகளில் எந்த இங்கிலாந்து வீரரும் டெச்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடிக்கவில்லை. தற்போது 59 ஆண்டுகளில் முதல்முறையாக ஹாரி ப்ரூக் முச்சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் குறைந்த பந்துகளில் முச்சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஹாரி ப்ரூக் 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சிறப்பாக ஆடிய ஹாரி ப்ரூக் 322 பந்துகளில் 3 சிக்ஸ், 29 பவுண்டரி உட்பட 317 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இவருக்கு ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் எழுந்து நின்று வரவேற்பு அளித்தது. மேலும் பாகிஸ்தான் மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் ஒரு முச்சதம் விளாசி புதிய சாதனையையும் ஹாரி ப்ரூக் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 10, 2024, 14:51 [IST]
Other articles published on Oct 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+