Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் சாதனைக்கு சிக்கல்.. லாரா, பாண்டிங் ரெக்கார்டுக்கு ஆப்பு.. WTCல் புதிய வரலாறு படைத்த ஜோ ரூட்!

முல்தான்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 5வது முறையாக ஆயிரம் ரன்களுக்கு மேல் விளாசிய 7வது வீரர் என்ற புதிய சாதனையை இங்கிலாந்து ஜாம்பவான் ஜோ ரூட் படைத்துள்ளார். அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 5 ஆயிரம் ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற புதிய வரலாற்றையும் படைத்திருக்கிறார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, கேப்டன் ஷான் மசூத், ஆகா சல்மான் மற்றும் அப்துல்லா சஃபீக் ஆகியோரின் அபார சதம் காரணமாக 556 ரன்களை குவித்துள்ளது. இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களை சேர்த்துள்ளது.

pak vs eng england joe root

அதிரடியாக ஆடிய கிராலி 64 பந்துகளில் 64 ரன்களும், நட்சத்திர வீரர் ஜோ ரூட் 54 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர். இந்த இன்னிங்ஸில் ஜோ ரூட் 32 ரன்களை சேர்த்ததன் மூலமாக, நடப்பாண்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன் மூலமாக 5வது முறையாக இந்த மைல்கல்லை ஜோ ரூட் எட்டியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஒரே ஆண்டில் 5 முறை ஆயிரம் ரன்களை கடந்த 8வது வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 6 முறை ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்து முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் பிரையன் லாலா, மேத்யூ ஹெய்டன், ஜாக் காலிஸ், ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காரா, அலைஸ்டர் குக் ஆகியோர் 5 முறை ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.

இதனால் அடுத்த ஆண்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நேற்றைய ஆட்டத்தில் 27 ரன்களை சேர்த்ததன் மூலமாக ஜோ ரூட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற புதிய வரலாற்றை படைத்துள்ளார். 59 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், இதுவரை 5,005 ரன்களை விளாசி இருக்கிறார்.

இந்தப் பட்டியலில் ஜோ ரூட் முதலிடத்தில் இருக்க, இவருக்கு பின் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் லபுஷேன் 45 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,904 ரன்களையும், தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் 45 போட்டிகளில் விளையாடி 3,486 ரன்களையும் சேர்த்துள்ளனர். மேலும், ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12,434 ரன்களை விளாசி இருக்கிறார்.

அவர் இன்னும் 39 ரன்களை விளாசினால், அலைஸ்டர் குக்கின் 12,472 ரன்கள் என்ற சாதனையை முறியடிப்பார். இதன் மூலமாக இங்கிலாந்து வரலாற்றில் அதிக டெஸ்ட் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைப்பார். ஏற்கனவே இவர், அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 9, 2024, 8:14 [IST]
Other articles published on Oct 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+