Pak vs Eng - பாபர் அசாம்க்கு கதம்! கதம்! மாற்று வீரராக வந்த Kamran Ghulam அறிமுக போட்டியிலே சதம்
முல்தான் : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம், அதிரடியாக நீக்கப்பட்டார். பாபர் அசாம் தொடர்ந்து 18 இன்னிங்ஸ்களாக ஒரு முறை கூட அரை சதம் அடிக்காததால் அவர் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் பாபர் அசாம்க்கு பதிலாக கம்ரான் குலாம் என 29 வயது வீரரை பாகிஸ்தான் அணி தேர்வு செய்துள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் கடந்த போட்டியில் சதம் விளாசியஅப்துல்லா ஷபிக் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் முதல் விக்கெட்டுக்கு பாகிஸ்தான அணி 15 ரன்கள் தான் சேர்த்தது. பாகிஸ்தான் அணி கடந்த சில போட்டிகளாக முதல் விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இந்த சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷான் மசூத் மூன்று ரன்களில் திரும்பினார்.
இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு சலீம் ஐயூபுடன் அறிமுக வீரராக பாபர் அசாம் இடத்தில் களமிறங்கிய கம்ரான் குலாம் விளையாடினார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்தது. தனது சில போட்டிகளாக தடுமாறிய சயிம் அயூப் 160 பந்துகளை எதிர் கொண்டு 72 ரன்கள் சேர்த்த நிலையில் பாட்ஸ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
இது போன்ற சவுத் சக்கில் நான்கு ரன்களில் வெளியேற தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த கம்ரான் குலாம் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார. 192 பந்துகளை எதிர்கொண்ட அவர் 100 ரன்கள் விளாசினார். இதில் ஒன்பது பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். களத்தில் நங்கூரமிட்டு தடுமாறிய பாகிஸ்தான் அணியின் இன்னிங்சை அபாரமாக கட்டமைத்து வந்தார்.
நான்கு ரன்களில் வெளியேற தற்போது முகமது ரிஸ்வான் விளையாடி வருகிறார். 77 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அசாம் இடத்திற்கு வந்த வீரர் முதல் போட்டிகளில் சதம் விளாசியதால் இனி பாபர் அசாம் அணிக்கு திரும்ப முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய 13 வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை கம்ரான் குலாம் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications