Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"விடைபெறுகிறேன்".. மூத்த ஆஸ்திரேலிய வீரர் ஓய்வை அறிவித்தவுடன் பயிற்சியாளர் பதவி.. என்ன நடந்தது?

சிட்னி: ஆஸ்திரேலியா அணியின் மூத்த வீரரான மேத்யூ வேட் 36 வயதில் ஓய்வை அறிவித்து இருக்கிறார். அவர் ஆஸ்திரேலிய அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகள், 97 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டார்.

எனினும், கடந்த சில ஆண்டுகளாக ஒரு ஆஸ்திரேலிய ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் அவருக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற அவர் ஆர்வமாக இருந்த நிலையில் அவருக்கு அப்போது வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், தனக்கு இனி ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்து இருக்கும் அவர் ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

pak vs eng pakistan england


அவர் ஓய்வை அறிவித்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக உடனடியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஓய்வை அறிவித்த வீரருக்கு அடுத்த நிமிடமே பயிற்சியாளர் பதவி கிடைத்திருப்பது கிரிக்கெட் உலகில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலிய அணி தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக மேத்யூ வேட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தனது ஓய்வு முடிவு பற்றி மேத்யூ வேட் வெளியிட்ட வீடியோவில், "நான் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுகிறேன். ஒவ்வொரு தொடரின் போதும், ஒவ்வொரு உலகக் கோப்பையின் போதும் இதைப் பற்றி நான் விவாதித்துக் கொண்டே இருந்தேன்."

"கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக இது தொடர்ந்தது. தேர்வுக் குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோருடன் கடந்த ஆறு மாதங்களாக, 2024 டி20 உலகக் கோப்பை முடிந்தது முதல் பேசிக்கொண்டு இருக்கிறேன். கடந்த உலகக் கோப்பையில் எனக்கு இடம் அளிக்கப்படாத நிலையில் நாங்கள் அது பற்றி மிகவும் வெளிப்படையாக பேசினோம். நான் எனது கேரியரில் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை பற்றி புரிந்து கொண்டேன்."

"ஒருவேளை கடந்த உலகக்கோப்பையில் நான் விளையாடி, ரன் குவித்து, ஆஸ்திரேலியா உலக கோப்பை வென்று இருந்தால் நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாடி இருப்பேன். ஆனால் இப்போது நடந்திருப்பது என்ன என்பதை நாங்கள் அனைவரும் புரிந்து கொண்டு இருக்கிறோம்." என்றார். இனி ஆஸ்திரேலிய டி20 அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜோஸ் இங்லிஸ் செயல்படுவார். அவர் மேத்யூ வேட் இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, October 29, 2024, 8:34 [IST]
Other articles published on Oct 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+