PAK vs ENG: இமாம் உல் ஹக் பேட்டிங் செய்ய பயப்படுகிறார்.. காயம் அடைந்தது போல் நடிப்பதாக பிராட் புகார்
மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் பேட்ஸ்மேன் இமாம்-உல்-ஹக் தனது காயத்தை போலியாகக் காட்டி நடிக்கிறார் என்று இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் குற்றம் சாட்டியுள்ளார். இமாம் நொண்டி நொண்டி நடப்பது முற்றிலும் நடிப்பு என்று அவர் விமர்சித்துள்ளார்.
நான்காம் நாள் ஆட்டத்திற்கு முன்னதாக நடந்த பயிற்சி அமர்வின் போது, இமாம் தனது காலில் பேண்டேஜ் கட்டிக்கொண்டு நொண்டியபடி வந்ததை பார்த்த பிராட், தமக்கு இதில் உடன்பாடில்லை என்று கூறினார். ஊடகங்கள் மற்றும் சக வீரர்களின் விமர்சனங்களில் இருந்து தப்பிக்கவே அவர் இவ்வாறு காட்டிக் கொள்கிறார் என்றும் சாடினார். இமாம் சில பந்துகளை வீசி பயிற்சி செய்ய முயன்றார், ஆனால் அதற்குள் வலியால் நொண்டியபடி உடற்பயிற்சியாளர்களின் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

"இதெல்லாம் வெறும் நடிப்புதான். ஊடகங்கள் அல்லது சக வீரர்களிடமிருந்து தப்பிக்கவே அவர் இதனைச் செய்கிறார். யாருக்கும் தெரியாமல் உள்விளையாட்டு அரங்கிற்குள் இதைச் செய்திருக்கலாம். அதை விடுத்து, காயம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இப்படி மைதானத்தில் பேண்டேஜ் உடன் நொண்டி நடப்பது அவசியமற்றது. இதில் எனக்கு உடன்பாடில்லை," என்று பிராட் தெரிவித்துள்ளார்.
போட்டியின் முதல் நாளில் ஃபீல்டிங் செய்த போது, இமாம்-உல்-ஹக்கிற்கு இடது காலில் 'கிரேடு 1 தசைநார் கிழிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அதே நாளில் அவர் இரண்டு முக்கிய கேட்சுகளையும் தவறவிட்டிருந்தார். இதனால் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸில் அவர் விளையாடவில்லை. அவருக்கு 10 நாட்கள் ஓய்வு தேவை என தெரிவித்திருந்தது. அவருக்குப் பதிலாக சல்மான் அலி ஆகா மாற்று வீரராக ஃபீல்டிங் செய்தார்.
இமாமின் காயம் குணமடைவதை பொறுத்தே அவர் மீண்டும் களமிறங்குவது குறித்து பாகிஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்யும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை அணியின் சூழ்நிலை மோசமாக இருந்தால் அவர் பேட்டிங் செய்ய வரலாம் என்றும் கூறப்பட்டது. ஐசிசி விதிமுறைப்படி, concussion தவிர மற்ற காயங்களுக்கு மாற்று பேட்ஸ்மேன்களை அனுமதிக்க முடியாது என்பதால், 389 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடும் பாகிஸ்தான் அணிக்கு ஒரு பேட்ஸ்மேன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தற்போது பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 169 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. வெற்றி பெறுவதற்கு இன்னும் 220 ரன்கள் தேவைப்படும் நிலையில், இமாம்-உல்-ஹக் பேட்டிங் செய்ய வர வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications