PAK vs ENG: பாகிஸ்தான் vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டி.. எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்? முழு விவரம்
முல்தான்: பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டி எந்த சேனல், எந்த ஓடிடியில் நேரலையாக ஒளிபரப்பாகிறது என்பதை பார்க்கலாம்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்த போட்டி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் பேட்டிங் ரசிகர்களிடையே வியப்பை அளித்துள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 556 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் அணியின் அப்துல்லா சஃபீக், கேப்டன் ஷான் மசூத் மற்றும் சல்மான் ஆகா ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசினர். இந்த ஆட்டம் தொடங்கிய போதே பிட்சில் எந்த உதவியும் பவுலர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்க பூமியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் இங்கிலாந்து அணியின் பேட்டிங் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
அதற்கேற்ப இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்டத்தில் மட்டும் 396 ரன்களை குவித்து மிரள வைத்தது. தற்போது இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரரான ஜோ ரூட் இரட்டை சதம் விளாசி 375 பந்துகளில் 262 ரன்கள் எடுத்து ஒரு வழியாக வெளியேறி இருக்கிறார். ஆனால் மறுமுனையில் உள்ள இளம் வீரர் ஹாரி ப்ரூக் முச்சதம் விளாசி புதிய சாதனையை படைத்துள்ளார்.
அதேபோல் 4வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் இணைந்து 454 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய வரலாறு படைத்துள்ளனர். 4வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தற்போது வரை 143 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு769 ரன்களை குவித்துள்ளது. இதன் மூலமாக 213 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்றைய நாள் முழுவதும் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும் திட்டத்தில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இதனால் இலங்கை அணி ஒரே இன்னிங்ஸில் விளாசிய 952 ரன்கள் என்ற சாதனைக்கு சிக்கல் எழுந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. பேஸ் பால் ஸ்டைலில் இங்கிலாந்து அணி வீரர்கள் ஆக்ரோஷமாக பொளந்து கட்டி வருகின்றனர். இதனால் இங்கிலாந்து அணியால் எளிதாக இன்னும் 250 ரன்களுக்கு மேல் இன்று விளாச முடியும்.
இதன் காரணமாக இங்கிலாந்து - பாகிஸ்தான் போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆவலை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போட்டி இந்தியாவில் எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இதனை பார்க்க வேண்டுமென்றால் ஓடிடி-யில் மட்டுமே பார்க்க முடியும். இந்தியாவில் ஃபேன்கோட் ( Fancode ) ஓடிடி தளம் மற்றும் செயலியில் நேரலையாக பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications