Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் மாதிரி ஒரு அணியை பார்த்ததே இல்ல.. ஒற்றுமைனா என்னனே தெரியலை.. புலம்பிய கேரி கிறிஸ்டன்!

டெல்லி, ஆர்சிபி, குஜராத் உள்ளிட்ட அணிகளுடன் பணியாற்றி இருக்கிறார். அதேபோல் உலகம் முழுவதும் நடக்கும் பல்வேறு லீக் போட்டிகளிலும் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் பாகிஸ்தான் அணி கேரி கிறிஸ்டன் பயிற்சியின் கீழ் முன்னேற்ற பாதையில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறி இருக்கிறது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு சில வாரங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் பொறுப்பேற்றார். 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கேரி கிறிஸ்டன். அதன்பின் தென்னாப்பிரிக்கா அணிக்கு பயிற்சியாளராக இருந்த அவர், ஐபிஎல் தொடரில் ஏராளமான அணிகளுடன் பணியாற்றி வருகிறார்.

t20 world cup indian national cricket team cricket Babar Azam Gary Kirsten 20 2024

டெல்லி, ஆர்சிபி, குஜராத் உள்ளிட்ட அணிகளுடன் பணியாற்றி இருக்கிறார். அதேபோல் உலகம் முழுவதும் நடக்கும் பல்வேறு லீக் போட்டிகளிலும் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் பாகிஸ்தான் அணி கேரி கிறிஸ்டன் பயிற்சியின் கீழ் முன்னேற்ற பாதையில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறி இருக்கிறது.

இது முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேப்டன் பாபர் அசாம் தொடங்கி ஷாகீன் அப்ரிடி உள்ளிட்ட பலரையும் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் பேசுகையில், பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை என்பது துளியளவு கூட இல்லை.

பாகிஸ்தானுக்காக விளையாடும் வீரர்களை ஒரு அணி என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் நிச்சயம் ஒரு அணியாக தெரியவில்லை. ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்காமல் விலகுகிறார்கள். ஒவ்வொரு வீரரும் தனிச்சையாக செயல்படுகின்றனர். ஆளுக்கொரு திசை பக்கம் செல்கிறார்கள். நான் ஏராளமான அணிகளுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இதுபோன்ற ஒரு சூழலை பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய மூவருக்குள் ஒற்றுமை இல்லாததோடு, ஆளுக்கொரு குரூப்புடன் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சீனியர் வீரர்களாக இமாத் வாசிம், முகமது அமீர் ஆகியோர் மீண்டும் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டது அந்த அணிக்குள் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Story first published: Monday, June 17, 2024, 18:57 [IST]
Other articles published on Jun 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+