Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்போ சின்ன பசங்களா இருந்தாங்க.. இப்போ பெரியவங்களா ஆயிட்டாங்க.. பாகிஸ்தான் அணி இயக்குனர் பேச்சு

ஐதராபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இன்று தங்களுடைய முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதில் போட்டிக்கு முன்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Micky arthur on pakistan

அதில் பேசிய அவர் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருந்தது. நாங்கள் கோப்பை அருகே வரை வந்து விட்டோம். ஆனால் அப்போது எங்களது வீரர்கள் சின்ன பசங்களாக இருந்தார்கள். இப்போது அவர்கள் வளர்ந்து பெரியவர்களாக மாறிவிட்டார்கள். இப்போது எங்கள் அணி வீரர்களுக்கு அனுபவம் கிடைத்திருக்கிறது.

நான்கு ஆண்டுகள் அனுபவம் மூலம் இம்முறை நாங்கள் உலக கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பாக அது இருக்கும். எங்களுக்கு என்ன சவால்கள் அளிக்கப்படுகிறதோ அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம். ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு ஸ்டைலில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அதை போல் எங்களுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கின்றது.

அந்த ஸ்டைலை நோக்கி தான் எங்கள் வீரர்கள் விளையாடி வருகிறார்கள். ஆனால் அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என நினைக்கின்றேன். எங்கள் அணியின் பந்துவீச்சு படை உலகில் மிகச்சிறந்த ஒன்றாக விளங்குகிறது. எங்கள் பவுலர்கள் எவ்வளவு இலக்கை கொடுத்தாலும் அதனை தற்காத்துக் கொள்வார்கள். இதை நோக்கி தான் எங்களுடைய அணி செல்கிறது .

இதே போன்ற ஒரு கிரிக்கெட்டை நாங்கள் வெளிப்படுத்தி இம்முறை உலகக் கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறேன். எங்கள் அணியில் சில வீரர்கள் ஃபார்மில் இல்லாதது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. பக்கர் சமான், சதாப்கான் ஆகியோர் திறமை வாய்ந்தவர்கள். அவர்களின் நிச்சயம் ஃபார்முக்கு திரும்புவார்கள். இதே போன்று சவுத் சக்கில் போன்ற நல்ல வீரர்களும் எங்கள் அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

சதாப்கான் பந்துவீச்சில் விக்கெட்டுகளை சமீப காலமாக எடுக்கவில்லை என்றாலும் எங்களது அணியின் சிறந்த வீரர்களின் ஒருவராக அவர் இருக்கிறார். இந்தியா போட்டியை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்தியா போட்டிக்கு முன்பு நெதர்லாந்து, இலங்கை என இரண்டு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் இந்தியாவை எதிர்கொள்ளும் போது மனதளவில் நம்பிக்கையுடன் இருப்போம் என்று மிக்கி ஆர்த்தர் கூறியுள்ளார்.

Story first published: Friday, October 6, 2023, 0:46 [IST]
Other articles published on Oct 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+