வீடியோ - தொடர்ந்து 2 டி20 போட்டியில் தோல்வி.. பிரியாணியை ஃபுல் கட்டிய பாகிஸ்தான் வீரர்கள்
நியூசிலாந்து : 2023 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி சுற்றுகூட செல்ல முடியாமல் பாகிஸ்தான் அணி பாதியிலே வெளியேறியது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய பாகிஸ்தான அணி மூன்றிலும் படுதோல்வியை தழுவியது.
இதனை அடுத்து தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான அணி அங்கு ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு டி20 போட்டியிலும் பாகிஸ்தான அணி தோல்வியை தழுவியது.

இதனை அடுத்து இந்த தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால் எஞ்சிய மூன்று போட்டிகள் வெற்றி பெற வேண்டும். இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடர் தோல்வியால் மனசோர்வு அடைந்து விடக்கூடாது என்பதற்காக வழக்கம் போல் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்கள். நியூசிலாந்தில் உள்ள டூனிடன் நகரில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு சென்ற பாகிஸ்தான் வீரர்கள் அங்கு உணவு அருந்தி தங்களுடைய பொழுதை கழித்தனர்.
அப்போது பாகிஸ்தான் வீரர்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டனர். வீரர்களுக்கு பிடித்த உணவான பிரியாணி வழங்கப்பட்டது. அந்த பிரியாணியை ஒரு கட்டு கட்டிய பாகிஸ்தான் வீரர்கள் ஹோட்டலில் தங்களது பொழுதை கழித்தனர். ஏற்கனவே ஏற்கனவே உலகக் கோப்பையின் போது இந்தியாவில் உள்ள பிரியாணி உணவு வகையை ருசி பார்ப்பதற்காக பாகிஸ்தான் வீரர்கள் வாரம் வாரம் ஹோட்டலுக்கு சென்று தங்களுடைய பொழுதை கழித்தனர்.
தற்போது பாகிஸ்தான் அணி வீரர்கள் மீண்டும் தோல்வி முகத்தில் இருப்பதால் மீண்டும் உணவகத்துக்கு சென்று இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. பாகிஸ்தான் பந்துவீச்சு எப்போதுமே சிறப்பாக இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் பந்துவீச்சு எடுபடவில்லை.
நடப்பு டி20 தொடரில் கூட முதல் டி20 போட்டியில் 226 ரன்களையும், இரண்டாவது டி20 போட்டியில் 194 ரன்களையும் பாகிஸ்தான் அணி விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 2021 வது டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு சென்ற பாகிஸ்தான் அணி 2022 டி20 உலக கோப்பை இறுதி போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
Story first published: Tuesday, January 16, 2024, 21:07 [IST]
Other articles published on Jan 16, 2024


Click it and Unblock the Notifications