Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK vs NZ: பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி மழையால் தற்காலிக நிறுத்தம்.. ரிசர்வ் நாள் உள்ளதா?

கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று குரூப் 2 பிரிவில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த போட்டி மழையால் திட்டமிடப்பட்ட நேரத்தில் துவங்கவில்லை. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக லேசான மழை அச்சுறுத்தல் இருந்த போதிலும், மைதானத்தில் இருந்த உறைகள் துரிதமாக அகற்றப்பட்டு டாஸ் நிகழ்வு திட்டமிட்டபடி சரியான நேரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா தயக்கமின்றி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

ஆனால், அதன் பின் முதல் ஓவர் வீசும் முன்பே மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. அதனால் போட்டி துவங்கவில்லை. மழை நின்ற பின்னரே போட்டி துவங்கும் என்ற நிலை உள்ளது. இந்த சூப்பர் 8 போட்டிக்கு ரிசர்வ் நாள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை போட்டி கைவிடப்பட்டால் இரு அணிகளும் சூப்பர் 8 பிரிவு புள்ளிப் பட்டியலில் தலா ஒரு புள்ளியை பெறும்.

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா பேச்சு

முன்னதாக டாஸ் வென்ற பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, "நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம். இந்தப் போட்டிக்கான ஆடும் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நஃபாய் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அதிரடி வீரர் ஃபக்கர் சமான் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் ஃபஹீம் அஷ்ரப் என்ற சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் உள்ளார். மேலும், கொழும்பு ஆடுகளத்திற்கு ஏற்றவாறு பல சுழற்பந்து வீச்சுத் தேர்வுகளையும் நாங்கள் வைத்துள்ளோம்.

நியூசிலாந்து மிகவும் தரமான ஒரு அணி என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, அவர்களுக்கு எதிராக எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். அதற்காகவே நாங்கள் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

PAK vs NZ Pakistan Opt to Bat First in T20 World Cup Super 8 Clash Against New Zealand as Fakhar Zaman Returns

சான்ட்னர் மீண்டும் வருகை

கடந்த போட்டியில் உடல்நலக் குறைவால் விளையாடாத நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர், தற்போது முழுமையாகக் குணமடைந்து அணிக்குத் திரும்பியுள்ளார்.

டாஸ் நிகழ்வின் போது பேசிய அவர், "எங்கள் அணியில் இன்று மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர். பாகிஸ்தான் அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். கொழும்பு மைதானமும் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால், இந்தப் போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

லீக் சுற்றில் கலவையான முடிவுகளைச் சந்தித்த இரு அணிகளுமே, சூப்பர் 8 சுற்றை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளதால் இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இரு அணிகளின் ஆடும் லெவன் விவரம்:

பாகிஸ்தான் அணி: சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் ஆகா (கேப்டன்), பாபர் அசாம், பக்கர் சமான், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), ஷதாப் கான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், சல்மான் மிர்சா, உஸ்மான் தாரிக்.

நியூசிலாந்து அணி: டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஜேம்ஸ் நீஷம், மேட் ஹென்றி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன்.

Story first published: Saturday, February 21, 2026, 18:46 [IST]
Other articles published on Feb 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+