PAK vs OMAN: 67 ரன்களில் சுருண்ட ஓமன்.. இந்தியாவை சந்திப்பதற்கு முன் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான்
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் ஓமன் அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய சையும் அயூப் வெளியேற மற்றொரு தொடக்க வீரரான ஃபர்கான் 29 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மேலும் மூன்றாவது வீரராக விளையாடிய முஹம்மது ஹாரிஸ் அதிரடியாக ரன்களை குவித்தார்.7 பவுண்டரி மூன்று சிக்சர்கள் என 43 பந்துகளில் அவர் 66 ரன்கள் சேர்த்தார்.

இதைப் போன்று அனுபவ வீரரான ஃபக்கர் சமான் 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சல்மான் ஆகா டக்அவுட் ஆக ஹசன் நவாஸ் ஒன்பது ரன்களிலும், முகமது நவாஸ் 19 ரன்களிலும் வெளியேறினர். பகீம் அஷ்ரப் எட்டு ரன்களில் ஆட்டம் இழக்க ஷாஹீன் அப்ரிடி இரண்டு ரன்கள் எடுத்து களத்தில் கடைசி வரை நின்றார்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரர் அமீர் கலீம் 13 ரன்களிலும், மூன்றாவது வீரரான ஹமாது மிர்சா 27 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
மூன்று வீரர்களை தவிர எஞ்சிய ஏழு வீரர்கள் யாருமே இரட்டை இலக்கம் ரன்களை தொடவில்லை. இதன் காரணமாக ஓமன் அணி 16.4 ஓவர்களில் எல்லாம் 67 ரன்களில் சுருண்டது. பாகிஸ்தான் பந்துவீச்சு சையும் அயூப், சூபியான் மற்றும் பகீம் அஷ்ரப் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றும் புள்ளி பட்டியலில் இந்தியாவை முந்தவில்லை. பாகிஸ்தான் அணியின் ரன் ரேட் 4.65 ஆக உள்ள நிலையில் இந்தியாவின் ரன் ரேட் 10.48 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications