For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

PAK vs SA: பாகிஸ்தானை பொளந்த தென்னாப்பிரிக்கா.. சொந்த மண்ணில் ஆல்-அவுட் ஆகி படுதோல்வி

ராவல்பிண்டி: பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் நடந்த இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டுப் போலச் சரிந்ததால், தென்னாப்பிரிக்கா எளிதில் வெற்றியைப் பதிவு செய்து, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்துக் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு, ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் குயிண்டன் டி காக் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். டி காக் 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், பவர்பிளே ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 74 ரன்களைக் குவித்தது.

PAK vs SA 1st T20 How Pakistan lost to South Africa by 55 runs The Visitors Registers Commanding Victory

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரீசா ஹென்ட்ரிக்ஸ் 40 பந்துகளில் 60 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மிடில் ஆர்டரில், டோனி டி சோர்சி 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஜார்ஜ் லிண்டே 22 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். அவர்களின் பங்களிப்பால், தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.

பாகிஸ்தான் தரப்பில், முகமது நவாஸ் 4 ஓவர்கள் வீசி வெறும் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சயிம் அயூப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஷஹீன் அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் அதிக ரன்களை வாரி வழங்கியது பாகிஸ்தானுக்குப் பின்னடைவாக அமைந்தது.

சரிந்த பாகிஸ்தான் பேட்டிங் வரிசை:

195 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 24 ரன்கள் எடுத்தும் மற்றும் சயிம் அயூப் 37 ரன்கள் எடுத்தும் ஓரளவு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய நட்சத்திர வீரர் பாபர் அசாம், 2 பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் 'டக் அவுட்' ஆகி அதிர்ச்சியளித்தார். கேப்டன் சல்மான் ஆகாவும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிய, பாகிஸ்தான் அணி 12.5 ஓவர்களில் 89 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், முகமது நவாஸ் மட்டும் தனி ஆளாகப் போராடி 20 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இருப்பினும், மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால், பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.

தென்னாப்பிரிக்காவின் அபார பந்துவீச்சு:

தென்னாப்பிரிக்க அணி சார்பில், வேகப்பந்து வீச்சாளர் கார்பின் போஷ் அபாரமாகப் பந்துவீசி, 4 ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திப் பாகிஸ்தானின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். பேட்டிங்கில் சிறந்து விளங்கிய ஜார்ஜ் லிண்டே, பந்துவீச்சிலும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆல்ரவுண்டராக ஜொலித்தார். லிசாட் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Story first published: Wednesday, October 29, 2025, 7:57 [IST]
Other articles published on Oct 29, 2025
English summary
PAK vs SA 1st T20: How Pakistan lost to South Africa by 55 runs? The Visitors Registers Commanding Victory
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+