Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போடு! இந்தியாவுக்கு உதவும் பாகிஸ்தான்.. இது மட்டும் நடந்தால், WTC பைனலுக்கு இந்தியா செல்வது உறுதி

செஞ்சூரியன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால் அதற்கு பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியின் தயவு தேவைப்படுகிறது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமனில் உள்ளது.

தற்போது நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பின்னடைவை சந்தித்து இருந்தாலும், இந்த தொடரில் குறைந்தபட்சம் மேலும் ஒரு டெஸ்ட்டிலாவது இந்தியா வெற்றி பெற வேண்டும்.

pak vs sa babar azam ind vs aus south africa vs pakistan

அப்படி செய்தால் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியின் உதவி கிடைத்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு சென்று விடும். அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணி தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் ஆவது வெற்றி பெற்றாலோ இல்லை சமன் செய்தாலோ அது இந்தியாவுக்கு நன்மையை கொடுக்கும்.

அந்த வகையில் தற்போது செஞ்சூரியரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 211 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்க அணி 301 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது.

இதில் பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் பாபர் அசாம் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார். இதேபோன்று சவுத் ஷக்கீல் 84 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 237 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து தென்னாபிரிக்க அணி வெற்றி பெற பாகிஸ்தான் அணி 148 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.
இந்த சூழலில் தென்னாப்பிரிக்கா அணியில் டோனி டிஸோர்சி, ரியான் ரிக்கல்டன், டிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

தற்போது களத்தில் ஏய்டன் மார்க்கரம், கேப்டன் பெவுமா ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.தென்னாபிரிக்க அணி தற்போது மூன்று விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு இன்னும் 121 ரன்கள் தேவை. பாகிஸ்தான் அணி வெற்றிக்கு ஏழு விக்கெட்டுகள் தேவை. இதனால் பாகிஸ்தான அணி அந்த 7 விக்கெட்டுகளையும் விரைவில் எடுத்து விட்டால் அந்த அணி வெற்றி பெற்று விடும்.இதன் மூலம் தென்னாப்பிரிக்கா ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பு குறையும்.

Story first published: Saturday, December 28, 2024, 23:18 [IST]
Other articles published on Dec 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+