Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விக்கெட்டே விழலையா? இந்தா வைச்சுக்குங்க.. அல்வா மாதிரி கேட்ச் கொடுத்து சிரிப்பு மூட்டிய பாக். வீரர்!

லண்டன் : பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா இடையே நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஒருவர் சிரிப்பை வரவழைக்கும் ஷாட் ஆடி அவுட் ஆகி இருக்கிறார்.

பாகிஸ்தான் அணியினர் தான் அதிக அளவில் விசித்திர முறையில், சிரிப்பை வரவழைக்கும் வகையில் ஆட்டமிழந்து இருக்கிறார்கள் என்று சொன்னால் யாராலும் மறுக்க முடியாது. களத்திலும் நிறைய காமெடி செய்வார்கள். அதில் புதிதாக ஒரு வித்தையை இறக்கி இருக்கிறார் பாக்கர் சமான்.

ஆச்சரியம் அளித்தது

ஆச்சரியம் அளித்தது

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு எதிராக பம்மிய பாகிஸ்தான் அணியா இது? என ஆச்சரியப்பட வைக்கும் வகையில் பேட்டிங்கில் மிரட்டியது அந்த அணி.

துவக்கம் அபாரம்

துவக்கம் அபாரம்

துவக்க வீரர்கள் இமாம் உல் ஹக், பாக்கர் சமான் சிறப்பாக கூட்டணி அமைத்து ரன் சேர்த்து வந்தனர். 14 ஓவர்களை கடந்து 81 ரன்கள் குவித்து ஆடி வந்தது இந்தக் கூட்டணி. இவர்களில் ஒருவர் விக்கெட்டை கூட எடுக்க முடியாமல் திணறியது தென்னாப்பிரிக்கா.

இம்ரான் தாஹிர் ஓவர்

இம்ரான் தாஹிர் ஓவர்

அப்போது இம்ரான் தாஹிர் பந்து வீச வந்தார். அதுதான் இந்தப் போட்டியில் அவரின் முதல் ஓவர். அவர் வீசிய சுழற் பந்தை ஸ்கூப் ஷாட் அடிக்க வந்தார் சமான். ஆனால், பந்து திசை மாறி செல்ல, அவரால் அந்த ஷாட்டை அடிக்க முடியவில்லை.

கேட்ச்

கேட்ச்

மாறாக, பந்து அவரது கிளவுஸில் பட்டு, பின்னே ஸ்லிப்பில் நின்று இருந்த ஆம்லா கைகளில் அல்வா போல போய் விழுந்தது. சமான் ஸ்கூப் ஷாட் ஆட முயற்சி செய்த விதமும், ஆட்டமிழந்த விதமும் மிகவும் முதிர்ச்சியற்ற ஒரு வீரரின் செயல் போல இருந்தது.

சிரிப்பு

சிரிப்பு

அவர் அடித்த ஷாட்டை பார்த்து தென்னாப்பிரிக்க வீரர்கள் சிரித்து வெற்றியை கொண்டாடினார்கள். அவர் புது ஷாட்டை முயன்று பார்க்காமல் இருந்திருந்தால் அரைசதம் கடந்து இருக்கலாம். பாகிஸ்தான் ரசிகர்கள் அவர் ஆடிய ஷாட்டை கண்டு கடுப்பானார்கள்.

சயின்டிஸ்ட் சமான்

உடனே இணையத்தில் அவரை கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். அதில் சில இங்கே - சயின்டிஸ்ட் சமான் புதிய ஷாட்டை கண்டுபிடிக்கும் போது தோல்வி அடைந்தாராம்.

என்ன திறமை!

என்ன திறமை!

பாக்கர் சமான் திறமைக்கு தலை வணங்குகிறோம் என்று, அவரது விசித்திரமாக அவுட் ஆகும் திறமையை கிண்டல் செய்துள்ளார்.

லகான்

லகான் படத்தை அதிகமா பார்த்ததால் இப்படி தான் ஆகும் என அந்தப் படத்தில் ஒருவர் இதே போல ஆட்டமிழப்பதை சுட்டிக் காட்டி கேலி செய்துள்ளார்.

Story first published: Sunday, June 23, 2019, 22:43 [IST]
Other articles published on Jun 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+