Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பக்கத்துக்கு நாடு பாகிஸ்தானுக்கு குரல் கொடுத்து வைரலான இந்திய ரசிகர்.. அடுத்து என்ன ஆகப் போகுதோ?

லண்டன் : பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா போட்டியில் இந்திய இளைஞர் ஒருவர் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு குரல் கொடுத்து வைரல் ஆகி இருக்கிறார்.

இந்திய அணியிடம் தோற்ற பாகிஸ்தான் அணி அடுத்து தென்னாப்பிரிக்கா அணியை சந்தித்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை நூலிழையில்தக்க வைத்துக் கொண்டது பாகிஸ்தான்.

அந்த இளைஞர்

அந்த இளைஞர்

அதனால், பாகிஸ்தான் அணி தீவிரமாக ஆடி வந்தது. ஏராளமான பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண கூடி இருந்தார்கள். அவர்களுக்கு இடையே இந்திய கிரிக்கெட் அணியின் நீல நிற ஜெர்ஸி அணிந்த ஒரு இளைஞர் காணப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு ஆதரவு

பாகிஸ்தானுக்கு ஆதரவு

இந்திய ரசிகருக்கு பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா போட்டியில் என்ன வேலை என பலரும் யோசித்துக் கொண்டு இருந்த போது, அவர் கையில் இருந்த காகிதத்தில் "பக்கத்துக்கு நாட்டுக்கு ஆதரவு" என பாகிஸ்தானுக்கு குரல் கொடுக்கும் வாசகம் எழுதப்பட்டு இருந்தது.

வைரல்

வைரல்

பாகிஸ்தான் ரசிகர்கள் அவர் ஆதரவை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர். உடனடியாக இந்த காட்சி கிரிக்கெட் நேரலை ஒளிபரப்பிலும், இணையத்திலும் பகிரப்பட்டது. அந்த இளைஞர் உடனடியாக பாகிஸ்தானில் வைரல் ஆனார்.

என்ன ஆகப் போகிறதோ?

இந்திய அளவில் சிலர் அவரது செயலை ஏற்றுக் கொண்டாலும், சிலர் அவரை திட்டியும், சிலர் அவர் இந்தியா திரும்பிய உடன் என்ன ஆகப் போகிறதோ? என்று வருத்தம் அடைந்தும் இருந்தனர்.

செட்டப்பா இருக்குமோ?

செட்டப்பா இருக்குமோ?

இது ஒருவேளை "செட்டப்" ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உலகக்கோப்பை தொடரை அதிகம் பார்க்கும் நாடு இந்தியா தான். அதனால், பாகிஸ்தான் போட்டியில் இந்தியர் ஒருவரை காட்டினால் டிஆர்பி எகிறும் என்ற திட்டமாக இருக்கலாம் என்ற கோணமும் இதில் உள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பின் பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக விமர்சித்து வந்த பாகிஸ்தான் ரசிகர்கள், தென்னாப்பிரிக்கா போட்டியில் அவர்கள் ஆடிய ஆட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தான் வெற்றி

சில ரசிகர்கள் மன்னிப்பு கேட்டு கையில் பதாகை ஏந்தி நின்ற காட்சியையும் பார்க்க முடிந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. அரையிறுதி வாய்ப்பை நூலிழையில் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Story first published: Monday, June 24, 2019, 0:01 [IST]
Other articles published on Jun 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+