Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK vs SA: கடைசி வரை டென்ஷன்.. பாகிஸ்தான் கேப்டனாக ஷாகின் அஃபிரிடிக்கு முதல் வெற்றி

பைசலாபாத்: பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட், மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்த நிலையில் டி20 தொடரில் பாகிஸ்தான் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி பைசலாபாத் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Pak vs SA

இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் லுகான் பிரிட்டோரியஸ் 57 ரன்களும், குயிண்டன் டி காக் 63 ரன்களும் எடுத்தனர். கேப்டன் மாத்யூ பிரிட்ஸ்கி 42 ரன்கள் எடுக்க இறுதியில் கார்பின் போஸ் 41 ரன்கள் எடுத்தார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 49.1வரில் 263 ரன்ளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக முதல் முறையாக களமிறங்கிய ஷாகின் அப்ரிடி ஒரு விக்கெட்டையும், நசீம் ஷா மூன்று விக்கெட்டையும், அப்ரார் அகமத் மூன்று விக்கெட்டையும் கைப்பற்றினார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

தொடக்க வீர பக்கர் ஜமான் மற்றும் சையும் ஆயூப் பொறுப்புடன் விளையாடி முதல் விக்கெடுக்கு 87 ரன்கள் சேர்த்தனர். சையூம் அயூப் 39 ரன்களில் ஆட்டம் இழக்க, பக்கர் சமான் 45 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம், டி20 கிரிக்கெட்டில் நல்ல பார்மில் விளையாடிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அதேபோன்று முகமது ரிஸ்வான் 74 பந்துகளை எதிர் கொண்டு 55 ரன்கள் சேர்க்க சல்மான் ஆகா 62 ரன்கள் சேர்த்தார். நடு வரிசையில் இந்த ஜோடி அமைத்த பார்ட்னர்ஷிப், பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இறுதியில் ஹுசைன் தலாக் 22 ரன்கள் எடுத்தார். எனினும் கீழ் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இரண்டு பந்துகள் எஞ்சிய நிலையில் பாகிஸ்தான் அணி எட்டு விக்கெட் இழந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை வியாழக்கிழமை மதியம் 3.30 மணிக்கு தொடங்கும். ஆனால், இந்தப் போட்டி இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

Story first published: Wednesday, November 5, 2025, 9:29 [IST]
Other articles published on Nov 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+