ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோத போகும் இரண்டாவது அணி எது என்பதை தீர்மானிக்க கூடிய முக்கிய சூப்பர் 4 லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இதில் பலம் வாய்ந்த பாகிஸ்தானும் இலங்கையும் பலப் பரிட்சை நடத்துகின்றன. இது கிட்டத்தட்ட அரை இறுதி போட்டி போல் ஆகும் இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி விடும்.

இதனால் பாகிஸ்தான அணி வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இந்த ஆட்டத்தை எதிர்கொள்ள இருந்ததும் இதற்காக பாகிஸ்தான் அணி பிளேயிங் லெவனில் பல மாற்றங்களை மேற்கொண்டு இருந்தது. இந்த நிலையில் இலங்கை அணியை பொறுத்தவரை பலம் வாய்ந்த இந்தியாவிற்கே தண்ணீர் காட்டி நல்ல உத்வேகத்துடன் இருந்தார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியோ இந்தியாவிடம் படுதோல்வியை தழுவிய நிலையில் மீண்டும் உத்வேகத்தை பெறும் நிலையில் இன்று ஆட்டத்தை கருதினர்.
இன்று அனைவரின் கண்களும் இலங்கையின் இளம்வீரர் வெல்லால்கலே எவ்வாறு செயல்பட போகிறார் என்பதில் தான் இருந்தது. ஏனெனில் அவர் ரோகித் சர்மா, விராட் கோலி,கில் போன்ற நட்சத்திர வீரர்கள் விக்கெட்டை கைப்பற்றிய நிலையில் உலகில் நம்பர் ஒன் வீரரான பாபர் அசாமை அவர் எப்படி சமாளிக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆசிய கோப்பையில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டிகளில் இலங்கையின் கை தான் ஓங்கி இருந்தது. மேலும் உலக கோப்பை தொடருக்கு முன்பு இலங்கை போன்ற பலமான சுழல் பந்துவீச்சாளர்களுடைய அணியை எதிர்கொள்ள வேண்டும் என பாகிஸ்தானும் எதிர்பார்த்து இருந்தது. ஆனால் தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் டாஸ் கூட போட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே டாஸ் 40 நிமிடம் தாமதமாகி உள்ள நிலையில் டாஸ் போடுவதற்காக இரு அணி கேப்டன்களும் மைதானத்திற்கு வந்த போது மீண்டும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தார்ப்பாயால் முழு மைதானமும் மூடப்பட்டிருக்கிறது. இந்த ஆட்டத்திற்கு ரிசர்வ் டே ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். அதிக ரன் ரேட் காரணமாக இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்த நிலையில், மாலை 5 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த ஆட்டம் தற்போது 45 ஓவர்களாக நடத்தப்படுகிறது. பவர்பிளே 9 ஓவர், 27 ஓவர், 9 ஓவர் என்று 3 வேலையாக நடத்தப்படுகிறது.