Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"என்ன சிம்ரன் இதெல்லாம்!".. மெகா டக் அவுட் ரெக்கார்டை சமன் செய்த கிங் பாபர் அசாம்

ராவல்பிண்டி: "ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் என்றால் சும்மா கிழி கிழி என அடிக்கும் பாபர் அசாம், கொஞ்சம் நன்றாக பந்து வீசும் அணி என்றால் கூட முட்டைதான் போடுவாரா?" என்று பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 'டக் அவுட்' ஆன பாபர் அசாம், பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மோசமான சாதனையைச் சமன் செய்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில், நேற்று நடந்த போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தானின் 'ரன் மெஷின்' பாபர் அசாம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

PAK vs SL King Babar Azam Equals Umar Akmal s Unwanted T20I Duck Record

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. 3-வது வீரராக, 'கிங்' பாபர் அசாம் உள்ளே வந்தார். 'சரி, இன்னைக்கு ஒரு சதம் அல்லது அரைசதம் அடிப்பார்' என்று அவரது தீவிர ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், துஷ்மந்தா சமீரா வீசிய யார்க்கர் பந்து பாபரின் காலை பதம் பார்த்தது. எதிர்பார்த்தது ரன் மழை, ஆனால் கிடைத்தது 'டக் அவுட்'. வெறும் 2 பந்துகளைச் சந்தித்த பாபர் அசாம், ரன் ஏதும் எடுக்காமல் 'எல்பிடபுள்யூ' ஆகி பெவிலியன் திரும்பினார்.

உமர் அக்மல் கூடவே கூட்டணி!

இந்த 'டக் அவுட்' மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக அதிக முறை டக் அவுட் ஆனவர் என்ற "பெருமையை" பாபர் அசாம் பெற்றுள்ளார். அதுவும் யாரைச் சமன் செய்துள்ளார் தெரியுமா? பாகிஸ்தான் அணியின் 'காமெடி பேட்ஸ்மேன்' என்று அடிக்கடி ட்ரோல் செய்யப்படும் விக்கெட் கீப்பர் உமர் அக்மலை சமன் செய்துள்ளார்.

இதுவரை பாபர் அசாம் டி20 போட்டிகளில் 10 முறை டக் அவுட் ஆகியுள்ளார். உமர் அக்மல் மற்றும் இளம் வீரர் சைம் ஆயூப் ஆகியோரும் தலா 10 முறை டக் அவுட் ஆகி உள்ளனர். அவர்களுடன் பாபர் அசாம் கடும் போட்டி போட்டு வருகிறார்.

பாகிஸ்தானுக்காக அதிக டி20 'டக்' அவுட் ஆனவர்கள்:

சைம் ஆயூப் - 10 டக் (55 போட்டிகள்)
உமர் அக்மல் - 10 டக் (84 போட்டிகள்)
பாபர் அசாம் - 10 டக் (135 போட்டிகள்)
ஷாஹித் அப்ரிடி - 8 டக் (98 போட்டிகள்)

உலக டக் அவுட் ரெக்கார்டு

உலக அளவில் அதிக டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் இலங்கையின் தசுன் ஷனகா 15 டக் அவுட் உடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 12 முறை டக் அவுட் ஆகியுள்ளார். பாபர் அசாம் இதே வேகத்தில் சென்றால், விரைவில் இந்தப் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பாபர் அசாமை நம்பி இருந்த பாகிஸ்தான் அணி, இறுதியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோற்றுப்போனது. "கிங் பாபர்னு சொல்றீங்க, ஆனால் டக் அவுட் ஆவதில் தான் கிங் என்று தெளிவா சொல்லுங்க!" என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறக்கின்றன. சனிக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியிலாவது பாபர் ரன் அடிப்பாரா அல்லது மீண்டும் முட்டை போடுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Friday, November 28, 2025, 10:01 [IST]
Other articles published on Nov 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+