Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK vs SL: நல்லாதானேய்யா ரன் அடிச்சுட்டு இருந்தீங்க.. கடைசி 13 பந்தில் வேலையைக் காட்டிய பாகிஸ்தான்

கொழும்பு: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் இமாலய ஸ்கோரை எட்டும் நிலையில் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த அணி செய்த சொதப்பலால், 13 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி அளித்தது.

பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அரையிறுதிக்குச் செல்ல வேண்டும் என்றால் மிகப்பெரிய வெற்றி தேவை என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

PAK vs SL Pakistan s Dramatic Batting Collapse Against Sri Lanka T20 World Cup 2026 Super 8 Clash

அடித்தளம் அமைத்த ஃபர்ஹான் - ஃபக்கர் ஜோடி

தொடக்கத்தில் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் அனல் பறந்தது. தொடக்க வீரர் சஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஃபக்கர் ஜமான் ஜோடி இலங்கை பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 176 ரன்களைக் குவித்து வலுவான அடித்தளத்தை அமைத்தது. ஃபக்கர் ஜமான் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் அதிரடியாக விளையாடிய சஹிப்சாதா ஃபர்ஹான் 60 பந்துகளில் 100 ரன்கள் விளாசி சதம் அடித்தார். 15 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றிச் சென்ற பாகிஸ்தான், 230 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

கடைசி நேர சொதப்பல்

ஆனால் ஆட்டத்தின் 16வது ஓவரில் ஃபக்கர் ஜமான் ஆட்டமிழந்த பிறகு பாகிஸ்தான் அணியின் சரிவு தொடங்கியது. குறிப்பாகக் கடைசி 2 ஓவர்களில் பாகிஸ்தான் பேட்டர்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினர்.

18வது ஓவர்: தசுன் ஷனகா வீசிய இந்த ஓவரின் கடைசி பந்தில் ஷதாப் கான் 7 ரன்களில் ரன் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 198 ஆக இருந்தது.

18.2 ஓவர்: அடுத்ததாக முகமது நவாஸ் ரன் ஏதும் எடுக்காமல் தசுன் ஷனகா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

18.4 ஓவர்: அதே ஓவரில் கேப்டன் சல்மான் அலி ஆகாவும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

19.1 ஓவர்: தில்ஷான் மதுஷங்க வீசிய ஓவரில் சதம் அடித்த ஃபர்ஹானும் ஆட்டமிழந்தார்.

19.3 ஓவர்: ஷாஹீன் அப்ரிடி 4 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

19.5 ஓவர்: நசீம் ஷா 1 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்

13 பந்துகளில் 6 விக்கெட்

198 ரன்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த பாகிஸ்தான், அடுத்த 13 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களுக்குத் தடுமாறியது. அதாவது 198 முதல் 210 ரன்களுக்குள், நவாஸ், சல்மான் ஆகா, ஷதாப் கான், ஃபர்ஹான், ஷாஹீன் அப்ரிடி என முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இலங்கை தரப்பில் தில்ஷான் மதுஷங்கா 3 விக்கெட்டுகளையும், தசுன் ஷனகா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கடைசி நேரத்தில் பாகிஸ்தானின் ரன் வேட்டையைக் கட்டுப்படுத்தினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்திருந்த நிலையில் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணி இமாலய ஸ்கோரை எட்டும் வாய்ப்பை கடைசி நேரத் தவறுகளால் கோட்டை விட்டது.

Story first published: Saturday, February 28, 2026, 21:05 [IST]
Other articles published on Feb 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+