Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK vs SL: நாக் அவுட் போட்டியில் வங்கசேத்துக்கு அடிச்ச லக்.. பாகிஸ்தான் அணிக்கு பாதகம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம் நடைபெறுகிறது. இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே இந்தியா தகுதி பெற்ற நிலையில், இரண்டாவது அணி எது என்பதை தீர்மானிக்கும் ஆட்டத்தில் இன்று வங்கதேசமும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றது.

நாக் அவுட் போட்டியாக கருதப்படும் இதில் வெற்றி பெறும் அணி பைனலுக்கு செல்லும் தோல்வி பெறும் அணி தொடரை விட்டு வெளியேறும். இந்த நிலையில் ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரு முறை கூட பைனலுக்கு சென்றதில்லை.

Pak vs SL

ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு முறை பாகிஸ்தானிடம் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது முறையாக பாகிஸ்தானை ஃபைனலில் சந்திக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்துள்ளது. இந்த தருணத்தில் துபாயில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஜேக்கர் அலி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இது குறித்து பேசிய அவர், நாங்கள் முதலில் பந்து வீச இருக்கின்றோம். ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருக்கின்றது. இதனால் பந்து வீசுவது நல்ல யுக்தியாக இருக்கும் என நினைக்கின்றோம். ஒரு பந்துவீச்சும் அணியாக எங்கள் வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். கடந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்களும் சிறப்பாக செயல்பட்டோம்.

இந்த தொடருக்கு முன்பு எப்படியாவது ஆசிய கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மன உத்வேகத்துடன் வந்திருக்கின்றோம். இந்த போட்டியிலும் அதேபோல்தான் நாங்கள் விளையாடுவோம். எங்கள் அணியில் இன்று மூன்று மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நூருல், டஸ்கின் அகமது மற்றும் மெஹந்தி ஹசன் ஆகியோர் அணிக்குள் திரும்பி இருக்கிறார்கள்.

சயிபுதீன்,நசும், தமீம் வெளியே சென்று இருக்கிறார்கள் என கூறினார். இதனை தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா, நாங்கள் முதலில் பேட்டிங் செய்யத்தான் இருந்தும். எனவே இந்த டாஸ் பற்றி கவலை இல்லை ஆடுகளம் மிகவும் நன்றாக இருக்கின்றது. ஆடுகளத்தில் ரன்களை குவித்து நெருக்கடியில் ஏற்படுத்த வேண்டும்.

அதுதான் முக்கியம். எனவே 150 ரன்களுக்கு மேல் குவித்து அதனை தற்காக்க நாங்கள் முயற்சி செய்வோம். இலங்கைக்கு எதிராக நாங்கள் பெற்று வெற்றி மிகவும் சிறப்பானது. இந்த போட்டியில் நல்ல கிரிக்கெட்டை விளையாடி எங்களுடைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றோம். இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஆனால் எங்களுடைய குறிக்கோள் எல்லாம் எந்த போட்டியில் தான் இருக்கின்றது. இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம் எங்கள் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என சல்மான் ஆகா தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, September 25, 2025, 19:36 [IST]
Other articles published on Sep 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+