Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK vs WI: 3வது டி20-யில் வெஸ்ட் இண்டீஸ் செய்த முட்டாள்தனம்.. மீண்டும் தொடரை வென்ற பாகிஸ்தான்

லாடர்ஹில்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் தொடரையும் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்ற நிலையில் தொடரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி லாடர்ஹில்லில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபர்கான் மற்றும் சயிம் அயூப் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

Pak vs Wi

இதில் பர்கான் 53 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். இதில் மூன்று பவுண்டர்களும், 5 சித்தர்களும் அடங்கும். இதுபோன்று சையிம் அயூப் 49 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், இரண்டு சிக்சர்களும் அடங்கும்.

பாகிஸ்தான் அதிரடி ஆட்டம்:

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து ஹசன் நவாஸ் 15 ரன்களும், முஹம்மது ஹாரிஸ் இரண்டு ரன்களும் எடுக்க பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது.இதனை அடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

தொடக்க இரண்டு ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக விளையாடி 33 ரன்கள் சேர்த்தது. ஆனால் அதன் பிறகு ஹாரிஸ் ரவுப் அபாரமாக பந்து வீசி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்.தொடக்க வீரர் ஜுவல் ஆண்ட்ரூ 15 பந்துகளில் 24 ரன்கள் எடுக்க, அலிஸ் ஏத்தன்ஸ் 40 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார்.

வெஸ்ட் இண்டீஸ் செய்த முட்டாள்தனம்:

இதில் எட்டு பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய் ஹோப் ஒன்பது பந்துகளை எதிர் கொண்டு 7 ரன்களில் வெளியேறினார்.எனினும் அனுபவ வீரர் ருத்தர் போர்ட் அதிரடியாக விளையாடி நான்கு பவுண்டரி, மூன்று சிக்சர் என 35 பந்துகளின் 52 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியே, ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் ராஸ்டன் செஸ் கொஞ்சம் அதிரடியாக விளையாட தடுமாறினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி அவரை ஆட்டம் இழப்பதற்கு முன் ரிட்டையர்டு அவுட் ஆகி பெவிலியன் அழைத்தது.

அதன் பின் களம் இறங்கிய ஜேசன் ஹோல்டர் இரண்டு பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆனார். கடைசி மூன்று ஓவரில் 41 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் செய்த இந்த முட்டாள்தனத்தால் களத்திற்கு புதிதாக வந்த வீரர்கள் தடுமாறினர். இந்த நிலையில் கடைசி ஓவரில் 25 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோது ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என வெஸ்ட் இண்டீஸ் மோதி அடிக்க பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணத்தில் அந்த அணி கைப்பற்றியது.

Story first published: Monday, August 4, 2025, 11:11 [IST]
Other articles published on Aug 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+