Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK vs WI: 23 பந்தில் 4 ரன்கள்.. ரிஸ்வான் மொக்கை பேட்டிங்.. பாபர் அசாம் டக் அவுட்..பாகிஸ்தான் தோல்வி

டிரிண்டாட்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தரோபாவில் நடைபெற்ற இந்த போட்டியில் மழை காரணமாக ஆட்டம் பலமுறை நிறுத்தப்பட்டது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான ஷையிம் அயூப் 31 பந்துகளை எதிர் கொண்டு 23 ரன்கள் சேர்த்தார். மேலும் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான சேலெஸ் பந்துவீச்சில் அவர் தடுமாறினார். அவர் வீசிய 9 பந்துகளிலும் சையிம் அயூப் ஒரு ரன் கூட அடிக்கவில்லை.

Pak vs WI

இதேபோன்று அப்துல்லா ஷபிக் 40 பந்துகளை எதிர் கொண்டு 26 ரன்களில் வெளியேறினார். இதை அடுத்து, பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பு பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் மீது வந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம், மூன்று பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி வெளியேறினார்.

இந்த தருணத்தில் ரிஸ்வான் ஒரு சிறப்பான டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார். தாம் எதிர்கொண்ட முதல் 23 பந்துகளில் ரிஸ்வான் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் வெறுப்பில் உச்சத்தில் இருந்தனர். எனினும் அதன் பிறகு ரிஸ்வான் இரண்டு பவுண்டரி, அடிக்க 38 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ரிஸ்வான் ஸ்டைரக் ரேட், டெஸ்ட் போட்டியில் போல் 42 என்ற அளவில் இருந்தது. இந்த தருணத்தில் ஹசன் நவாஸ் மற்றும் உசைன் தலாத் பாகிஸ்தான் அணிக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தனர். ஆனால் மழை அடிக்கடி குறிக்கிட்டதால் பாகிஸ்தான் அணியால் தங்களுடைய இன்னிங்சை முடிக்கவில்லை.

37 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதை அடுத்து டக்வொர்த் லூயிஸ் விதிப்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி இலக்கு 35 ஓவரில் 181 ரன்கள் என மாற்றப்பட்டது. இதை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரான பிராண்டன் கிங் 1 ரன்னிலும், ஈவன் லீவுஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழக்க, கேசி கார்ட்டி 16 ரன்களிலும் சாய் ஹோப் 32 ரன்களும் எடுக்க, இறுதியில் ரூத்தர்போர்ட் 45 ரன்களும், ராஸ்டன் சேஸ் 49 ரன்களும் எடுத்தனர்.

ஜஸ்டின் கிரிவ்ஸ் கடைசி கட்டத்தில் 26 ரன்கள் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணி 33.2 ஓவரில் எல்லாம் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு தொடங்கி இருக்கிறது.

Story first published: Monday, August 11, 2025, 8:32 [IST]
Other articles published on Aug 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+