Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK v WI-நானும் ரவுடி தான் பார்த்துக்கோங்க! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அபாரம்

முல்தான் : பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி முல்தான் நகரில் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய அந்த அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ஷான் மசூத் 11 ரன்களிலும் முகமது ஹுரைரா 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் 8 ரன்களிலும் கம்ரான் குலாம் 5 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

pak vs wi pakistan vs west indies babar azam mohammed rizwan

எனினும் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சவுத் சக்கில் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிவில் இருந்த பாகிஸ்தான் அணியை மீட்டனர்.
சவுத் சக்கில் 87 ரன்களும், முகமது ரிஸ்வான் 71 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இதனால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 230 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடுகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்வரிசை வீரர்கள் அனைவரும் பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

கேப்டன் பிராத்வெயிட் 11 ரன்களிலும், மிக்காயில் லூயிஸ் ஒரு ரன்னிலும், கேசி கார்ட்டி டக்அவுட் ஆகியும், கெவின் ஹூஜ் நான்கு ரன்களிலும், ஏத்தேன்ஷ் 6 ரன்களிலும் ஜஸ்டின் க்ரிவிஸ் நான்கு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.இறுதியில் ஜோமில் வாரிக்கான் 31 ரன்களிலும், ஜெய்டன் சீல்ஸ் 22 ரன்களும் எடுக்க அந்த அணி 137 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் பந்துவீச்சில் சஜித் கான் நான்கு விக்கெட்டுகளும், நோமன் அலி 5 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதை அடுத்து 93 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கி விளையாடியது. இரண்டாவது இன்னிங்ஸிலும் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர். இதில் கேப்டன் ஷான் மசூத் மட்டும் அரைசதம் அடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இதனால் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜொமில் வாரிக்கன் அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனை அடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கியது.

இதில் பிராத்வெயிட் 12 ரன்களும், மைக்கேல் லூயிஸ் 13 ரன்களிலும் ஆட்டம் இழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெவிம் ஹூஜ் டக் அவுட்டாகி வெளியேறினார். ஏத்னைஸ் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 68 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.


இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 123 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் சஜித் கான், ஐந்து விக்கெட்டுகளையும் அப்ரார் அஹ்மத் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது.

Story first published: Sunday, January 19, 2025, 17:26 [IST]
Other articles published on Jan 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+