Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK vs WI: ஒரே ஓவரில் 5 Wide, கேட்ச் மிஸ்.. பாகிஸ்தானுக்கு வெற்றியை பரிசளித்த வெஸ்ட் இண்டீஸ்

தரோபா: பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டி20 தொடரை பாகிஸ்தான அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒரு நாள் தொடர் இன்று அதிகாலை தொடங்கியது.

தரோபாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் பிராண்டன் கிங் நான்கு ரன்களில் ஆட்டம் இழக்க, ஈவன் லீவிஸ் 60 ரன்களிலும் கேசி கார்ட்டி 30 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

Pak vs wi

இதேபோன்று கேப்டன் சாய் ஹோப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 55 ரன்கள் சேர்த்தார். ராஸ்டன் சேஸ், டி20 போட்டியில் தடுமாறிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 54 பந்துகளை எதிர்கொண்டு 53 ரன்கள் சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரூத்தர்ஃபோர்ட் 10 ரன்களில் ஆட்டம் இழக்க, ரொமாரியோ செபர்ட் நான்கு ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் குடகேஷ் மோத்தி 31 ரன்கள் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 49 ஓவர் முடிவில் 280 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஷாகின் ஆப்ரிடி நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை அடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐந்து ரன்களில் வெளியேற அப்துல்லா ஷபிக் 29 ரன்கள் சேர்த்தார். இதனை அடுத்து நான்கு மாதம் இடைவெளிக்கு பின் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய பாபர் அசாம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

5 பவுண்டரி, ஒரு சிக்சர் என பாபர் அசாம் தன்னுடைய பழைய பார்மை மீட்கும் நிலையில் மூன்று ரன்களில் தனது அரை சதத்தை தவறவிட்டார். இதுபோன்று கேப்டன் ரிஸ்வான் 69 பந்துகளின் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழ்ந்தார். முக்கியமான கட்டத்தில் சல்மான் ஆகா 23 ரன்களில் வெளியேற பாகிஸ்தான் அணி தடுமாறியது. அப்போது ஹசன் நவாஸ் மற்றும் உசைன் தலாக் ஆகிய இளம் வீரர்கள் களத்திற்கு வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அப்போது ஹசன் நவாஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இரண்டு முறை தவறிவிட்டது. இது ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் நெருக்கடியை ஏற்படுத்தும் தருணத்தில் அல்சாரி ஜோசப் ஒரே ஓவரில் ஐந்து ஓயிடுகளை வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்ததும் பாகிஸ்தானுக்கு வெற்றியை எளிமையாக்கியது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது.

Story first published: Saturday, August 9, 2025, 15:27 [IST]
Other articles published on Aug 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+