For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தான் வீரர் நோமன் அலி ஹாட்ரிக் சாதனை.. 54 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்த வெஸ்ட் இண்டீஸ்

முல்தான் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் நோமன் அலி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஏற்கனவே முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முல்தான் நகரில் தொடங்கியது.

pak vs wi hat trick

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சுழற் பந்துவீச்சாளரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் பிராத்வெயிட் 9 ரன்களிலும், மைக்கேல் லூயிஸ் நான்கு ரன்களிலும், அமீர் ஜாங்கோ டக்அவுட் ஆகியும் வெளியேறினர்.

இதைப் போன்று ஏத்தேனஸ் டக்அவுட் ஆகவும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க அந்த அணியில் நடுவரிசை வீரர் கேவிம் ஹோஜ் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 ரன்கள் எடுத்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 54 ரன்கள் சேர்ப்பதற்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனை அடுத்து இறுதியில் குட்கேச்க் மோத்தி நிதானமாக விளையாடி 87 பந்துகளை எதிர்கொண்டு 55 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இறுதியில் கேமர் ரோச் 25 ரன்களிலும், ஜொமேல் வாரிகண் 36 ரன்களும், எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 41.1 ஓவரில் 163 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் பாகிஸ்தான் வீரர் நோமன் அலி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த ஆட்டத்தின் 11 ஆவது ஓவரை நோமன் அலி வீசினார். இதில் 11.1,11.2 மற்றும் 11.3 ஆகிய மூன்று பந்துகளிலும் ஜஸ்டின் கிரீவ்ஸ், தெவின் இம்லேச் மற்றும் கெவின் சின்கிலையர் ஆகியோரின் விக்கெட்டை நோமன் அலி வீழ்த்தினார்.இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் சாதனையை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு வசீம் அக்ரம், அப்துல் ரசாக், முகமது ஷமி, நசீம் ஷா போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்திய நிலையில் முதல் ஸ்பின்னர் நோமன் அலி ஆவார்.

Story first published: Saturday, January 25, 2025, 13:44 [IST]
Other articles published on Jan 25, 2025
English summary
Pak vs WI - Pakistan spinner Noman Ali created History by taking hat tricks பாகிஸ்தான் வீரர் நோமன் அலி ஹாட்ரிக் சாதனை.. 54 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்த வெஸ்ட் இண்டீஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+