
பலத்த பாதுகாப்பு
அதன் படி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானுடன் விளையாட வந்தது. வீரர்களின் பாதுகாப்பிற்காக 889 கமோண்டோ படை வீரர்கள், 3822 போலீசார் மற்றும் 500 RRF படை வீரர்கள், 46 டி.எஸ்.பி.கள்,315 என்.ஜி.ஓ.க்கள் மற்றும் 50 பெண் போலீசார் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பு பணியில் பாகிஸ்தான் அரசு ஈடுபடுத்தியது,

பாகிஸ்தான் ஆதிக்கம்
வீரர்கள் தங்கும் ஹோட்டலில் இருந்து மைதானம் வரை பாதுகாப்பு படை விரர்கள் நிறுத்தப்பட்டனர். இதனால் முதல் டி20 போட்டியில் எவ்வித சிக்கலும் இன்றி பாகிஸ்தான் 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டியிலும் பாகிஸ்தான் வென்று தொடரை கைப்பற்றியது.இதனையடுத்து தொடரை முழுமையாக கைப்பற்ற பாகிஸ்தான் உத்வேகத்துடன் உள்ளது.

எதிர்பாராத சிக்கல்
ஆனால், இங்கு தான் ஒரு டிவிஸ்ட் நிகழ்ந்துள்ளது. 5000 பாதுகாப்பு படை விரர்களையும் தாண்டி, ஒரு எதிரி மேற்கிந்தியத் தீவுகள் அணியை பதம் பார்த்துவிட்டான். அது தான் கொரோனா.. கொரோனாவின் ஒமைக்கரான் வகையால் உலகம் முழுவதும் மீண்டும் பரவி வருகிறது. இதனால் பாகிஸ்தானிலும் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video

வீரர்களுக்கு கொரோனா
மேற்கிந்தியத் திவுகள் அணியில் ஏற்கனவே ராஸ்டன் சேஸ்,கெயில் மயர்ஸ்,ஷில்டன் கொட்ரேல் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று சாய் ஹோப், ஜஸ்டின் கிரிவ்ஸ்,அகைல் ஹூசைன் ஆகியோருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் அணி நிர்வாகிகள் 2 பேருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. தற்போது மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் வர தொடங்கினால் பழைய மாதிரி மீண்டும் போட்டிகள் தடைப்படுமா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











