சார் இந்தியாகிட்ட ஜாக்கிரதையா இருங்க… மந்திரம் செய்யறாங்க…
கராச்சி: சார் நாங்க தோற்கல.. அவங்க ஜெயிச்சிட்டாங்க என்று சொல்லாமல், அரை இறுதியில் இந்தியா ஜெயிச்சதுக்கு காரணம், அவங்க ஏதோ மந்திரம் செஞ்சிட்டாங்க என, பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் மேனேஜர் நதீம் கான் கூறியுள்ளார்.
நியூசிலாந்தில் நடந்த, 12வது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. பைனலில் ஆஸ்திரேலியாவை வென்று, நான்காவது முறையாக கோப்பையை இந்திய அணி பெற்றது.

முன்னதாக அரை இறுதியில் பாகிஸ்தான் அணியை, 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெச்சு செஞ்சது. இந்தத் தோல்வியில் இருந்து பாகிஸ்தான் அணி இன்னும் தெளியவில்லை.
அணியின் மேனேஜரும், முன்னாள் டெஸ்ட் வீரருமான நதீம் கான், அணியின் தோல்விக்கான காரணத்தை கூறியுள்ளதுதான், 2018ம் ஆண்டின் மிகப் பெரிய ஜோக்காகும்.
நம்ம வில்லேஜ் விஞ்ஞானி, உலகப் புகழ்பெற்ற தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்டைலில், நதீம் கான் கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதைவிட, அவரைப் பார்த்து பரிதாபப்பட வைத்துள்ளது.
“சார் அரை இறுதியில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்த்தோம். நம்ம வீரர்களும் சிறப்பாக விளையாடினர். 69 ரன்களுக்கு அணி ஆட்டமிழந்தது பார்க்கும்போது எனக்கு சந்தேகம் வந்தது. ஏதோ மந்திரம் செய்துள்ளனர். இல்லாவிட்டால் இந்த வெற்றி சாத்தியமில்லை” என்று நதீம் கூறியுள்ளார். பாகிஸ்தான் வீரர் மோயின் கானின் அண்ணன்தான் இந்த நதீம்.
Story first published: Tuesday, February 6, 2018, 11:22 [IST]
Other articles published on Feb 6, 2018


Click it and Unblock the Notifications