Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களை எவன் டா சின்ன பசங்கள அழைத்து வர சொன்னது? பாக்.வீரரின் அறிவை பார்த்து அதிர்ந்த கந்தர்வக்கோட்டை

லாகூர்: வளரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அண்மையில் இலங்கையில் நடைபெற்றது. இதில் இறுதி ஆட்டத்தில் இந்திய ஏ அணியும் பாகிஸ்தான் ஏ அணியும் பலப் பரீட்சை நடத்தியது.

இதில் பாகிஸ்தான் ஏ அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த தொடரில் இந்தியாவைத் தவிர மற்ற அணிகள் அனைவரும் அனுபவம் வீரர்கள் நிறைந்த அணியே அனுப்பினார்கள்.

Pakistan a team skipper mohammed harris slams bcci for sending young team

இது விமர்சனத்தை எழுப்பியது.
காரணம் இந்த தொடர் என்பது இளம் வீரர்களுக்கு உரிய தொடராகும். ஆனால் இதனைப் புரிந்து கொள்ளாமல் இந்த தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் ஏ அணியின் கேப்டன் முகமது ஹாரிஸ் இந்தியாவை திட்டியிருப்பது கடும் சச்சரவை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து பேசிய அவர் இந்திய அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்த நிலையில் நாங்கள் ஏதோ மூத்த வீரர்களை அழைத்துக் கொண்டு இந்த தொடரில் களமிறங்கியதாக பேசுகிறார்கள். சின்ன பசங்களை மட்டும்தான் அணியில் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் ஏதேனும் சொன்னோமா? நாங்கள் ஏதோ சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருப்பது போல் பலரும் பேசுகிறார்கள்.

எங்கள் அணியில் எத்தனை வீரர்கள் சர்வதேச போட்டிகள் விளையாடி இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? சையும் அயூப் 5 போட்டிகளிலும், நான் ஆறு போட்டிகளிலும் விளையாடினோம். ஆனால் அனைத்துமே டி20 போட்டிகள் தான். அப்படி பார்த்தால் இந்திய வீரர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிகள் விளையாடிருக்கிறார்கள்.

ஐபிஎல் ஒன்றும் சின்ன தொடர் கிடையாது என்று முகமது ஹாரிஸ் கூறியிருக்கிறார். விவரம் தெரியாமல் முகமது ஹாரிஸ் பேசிய பேச்சு ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Sunday, August 6, 2023, 23:58 [IST]
Other articles published on Aug 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+