Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி மீது அப்படி என்ன வன்மம்? வங்கதேசம் வென்றால் உங்களோடு டேடிங்கிற்கு ரெடி..பாக். நடிகை சவால்

லாகூர் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா நாளை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி புனே கிரிக்கெட் மைதானத்தில் நாளை மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்தியா விளையாடிய மூன்று போட்டிகளிலுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவை அடிக்க முடியவில்லை என்றால் வில்லன்கள் வெளியில் இருந்து ஒரு ஆளை கூட்டி வந்து அடிக்க வைப்பார்கள்.

Pakistan actress dares to go on date with Bangladesh men if their team beat india

அப்படி அந்த ஆளை அடித்தால் உனக்கு வேண்டியதெல்லாம் நான் செய்கிறேன் என்றெல்லாம் கூறுவார்கள். இப்படி நாம் பல திரைப்படங்களை பார்த்திருக்கிறோம். அதைப் போல் தற்போது பாகிஸ்தான் நடிகை ஒருவர் சவால் விடுத்திருக்கிறார். உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் இதுவரை இந்தியாவிடம் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை.

விளையாடிய 8 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். இதனால் பாகிஸ்தான் அணியை நம்பினால் இனிமேல் வேலைக்கு ஆகாது என தெரிந்து கொண்ட பாகிஸ்தான் நடிகை சேகர் சின்வாரி சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில் இந்தியாவை வங்கதேசம் அணி வீழ்த்தி எங்களுக்காக பழி வாங்க வேண்டும்.

அப்படி செய்தால், நான் நேரடியாக டாக்காவுக்கு சென்று அங்கு இருக்கும் ஏதேனும் வங்கதேச பையனுடன் டேட்டிங் செல்வேன் ஆனால் அதற்கு உங்களுடைய அணி இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். செஹார் சென்வாரியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

உங்கள் அணியால் வீழ்த்த முடியவில்லை என்றால் பக்கத்து நாட்டு அணியை உதவிக்கு அழைப்பதெல்லாம் எந்த மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை என்று ரசிகர்கள் சாடி இருக்கிறார்கள். மேலும் சிலர் விளம்பரத்திற்காக இது போல் இந்தியாவின் பெயரை பயன்படுத்தி பிரபலம் ஆகலாம் என சென்வாரி நினைத்து விட்டார் என்று அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Wednesday, October 18, 2023, 16:12 [IST]
Other articles published on Oct 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+